×
 

பாடகி இங்க உங்க பொண்டாட்டி ஆர்த்தி எங்க..! ரவிமோகனுக்கு எதிராக நிற்கும் நடிகைகள்..! 

ரவி மோகன் எதுக்கு பாடகி கெனிஷாவுடன் வரணும் என ஆர்த்தி ரவிக்கு துணையாக களமிறங்கி உள்ளனர் நடிகைகள்.

தமிழில் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, மழை, தாஸ், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், இதய திருடன், தீபாவளி, வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், கோ, ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியெட், தனி ஒருவன், சகலகலா வல்லவன், பூலோகம், மிருதன், போகன், வனமகன், அடங்க மறு, டிக் டிக் டிக், தும்பா, கோமாளி, பூமி, பொன்னியின் செல்வன் (PS 1), இறைவன், அகிலன், பொன்னியின் செல்வன் 2, சைரன், பிரதர், தக் லைஃப், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரவிமோகன்.  

இத்தனை படத்தில் நடித்த ரவி மோகன் தன்னிடம் ஒரு ரூபாய் பணம் கூட இல்லை, எனது மனைவி எனக்கு மனைவியாக இல்லாமல் இன்னும் அவரது தாயாருக்கு மகளாகவே உள்ளார் என குற்றம் சாட்டி விவாகரத்திற்கு சென்றுள்ள வேளையில், இருவருக்கும் நீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ரவிமோகன் பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பரவ, அதனை பாடகியும் அப்பொழுது மறுத்தார்.

இதையும் படிங்க: நான் நிம்மதியாக தூங்க இவங்க தான் காரணம்..! நடிகை சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி வைரல்..!

ஆனால் இப்பொழுது சேம் கலர் ட்ரெடிஷ்னல் உடை அணிந்து ரவி மோகனும்,கெனிஷாவும் ஒன்றாக கைகோர்த்தபடி தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத்திருமண விழாவில் வந்து நிற்க, ஊர் கண்ணே படும் அளவிற்கு திருஷ்டி இவர்கள் இருவர் மீதும் விழ துவங்கியது. மேலும்,ரிஷப்ஷனுக்கும் இருவரும் வர ஜோடி பொருத்தம் அமோகமாக உள்ளது என பலரும் தெரிவித்து தனது போனில் போட்டோ எடுத்து ரவி மோகன் காதலி பாடகி தான் என பதிவிட்டு வருகின்றனர். 

இப்படி இருக்க, இதனை பார்த்து டென்ஷானான ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, ஒரு அறிக்கை ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதில், ஒரு வருடமாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகமே நாங்கள் பிரிய என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டிருக்கும்.

என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என மீடியாவிடம் கேட்டு கொள்கிறேன். சட்டப்படி, எனக்கும் ரவி மோகனுக்கும் விவாகரத்து ஆகவில்லை. ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது மகன்களை தவிக்கவிட்டு சென்று உள்ளார். எந்த பண உதவியும் இல்லாமல் நாங்கள் இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டில் இருந்து பேங்க் மூலமாக எங்களை காலி செய்ய வைத்துள்ளார் ரவி " என தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் ஆர்த்தி மோகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகைகள் ராதிகா, குஷ்பூ, உள்ளிட்ட பலர் இந்த அறிக்கைக்கு தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அதில், நடிகை குஷ்பூவின் பதிவில், "ஒரு தாயின் உண்மை என்பது வருங்காலத்தில் ஒரு சான்றாக நிற்கும்" என்று பதிவிட்டுள்ளார். அவரை தொடர்ந்து நடிகை ராதிகா, "இந்த நேரத்தில் தான் நீங்கள் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்கான சில எமோஜிகளையும் பதிவு செய்துள்ளார். இதேபோல் திரையுலகைச் சார்ந்த பல நடிகைகள் பலரும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இதையும் படிங்க: பள்ளிவாலு பத்ரவட்டகம்.. கேரளா ஸ்டைலில் சேச்சி மாளவிகா மோகனனின் கிறங்கடிக்கும் போட்டோஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share