ஹிஸ்ட்ரி புக்ல நடிகர் மம்முட்டி..! கௌரவப்படுத்திய அரசாங்கம்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகர் மம்முட்டியின் பெயர் பாடத்திட்டத்தில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் எப்படி ஃபேமஸோ அதேபோல் மலையாள திரையுலகம் மட்டுமல்லாது அனைத்து திரையுலகிலும் நடிகர் மம்முட்டி ஃபேமஸ் தான். நடிகர் ரஜினிகாந்தின் "தளபதி" திரைப்படத்தை ஒருவராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படத்தில் நட்புக்கு உதாரணமாக இருவரும் நடித்திருப்பர். அதிலும் இந்த திரைப்படத்தை குறித்து ஒவ்வொரு முறை நினைவு கூர்ந்தாலும் அனைவரது மனதிற்கும் நினைவுக்கு வரும் ஒரே விஷயம், " நட்புனா என்னன்னு தெரியுமா உனக்கு" என்ற அந்த ஒற்றை வரிதான்.
இப்படிப்பட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் மம்முட்டி இதுவரை தனது சினிமா வாழ்க்கையில் 50 வருட காலங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். அவரைக் குறித்து சற்று கீழே பார்க்கலாம். மம்மூட்டியின் உண்மையான பெயர் 'முகமது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில்'. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி சார்ந்த 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி. இப்படி இருக்க, திரையுலகில் இவரது ஆரம்ப வாழ்க்கை 1971ம் ஆண்டு கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் "அனுபவங்கள் பாலிச்சகல்" என்ற படத்தின் மூலம் தொடங்கியது.
இதையும் படிங்க: சீக்கிரம் செத்துடுவீங்க.. போதை நல்லா இருக்கும் ஆனா.. நடிகை அம்பிகா காட்டமான பேச்சு..!
அதன் பின், ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நடிகருக்கு மேளா, வில்லனுண்டு ஸ்வப்னங்கள் போன்ற படங்களில் நடித்தார். அதன்பின், 80களில் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்து, 90களில் பூதக்கண்ணடி, டாக்டர்.பாபாசாஹத் அம்பேத்கர், பொந்தன் மட மற்றும் விதேயன் போன்ற மலையாள படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார். இப்படி இருக்க, 1990ம் ஆண்டு, கே.மது இயக்கிய "மௌனம் சம்மதம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மம்முட்டி. தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் "அழகன்", இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "தளபதி", இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் "கிளிப்பேச்சு கேக்கவா", என்.லிங்குசாமி இயக்கத்தில் "ஆனந்தம்" மற்றும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். பின் தெலுங்கில் இயக்குனர் கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு "சுவாதி கிரணத்தில்" நடித்தார்.
இப்படி மலையாளம் தமிழ் என அனைத்து திரையுலகிலும் இவர் ஆற்றிய பங்கு மிகவும் பெரியது. இவரை போலத்தான் இவரது அன்பு மகன் துல்கர் சல்மானும்.. இவரும் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி சினிமா துறையில் நடித்ததுடன் மட்டுமல்லாமல் பல உதவிகளையும் மேற்கொண்டு வருகிறார். இப்படி சினிமாவில் அவருடைய பங்களிப்பு அதிகமாக இருப்பதால் அவரை பற்றி கேரளாவில் "பட்டப்படிப்பு பாடதிட்டத்தில்" சேர்க்கப்பட்டு இருக்கிறதாம். அதன்படி, கேரளா எர்ணாகுளத்தில் செயல்பட்டு வரும் மகாராஜா கல்லூரியில் "பிஏ (BA) ஹானர்ஸ்" பாடத்திட்டத்தில் "History of Malayalam Cinema" என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பாடப்பகுதி இருக்கிறது. அதில் மம்மூட்டியின் வாழ்க்கை வரலாறு முறையை பாடமாக இணைத்துள்ளனர்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இது நடிகர் மம்முட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருக்கின்றனர்.
இதையும் படிங்க: நான் என்ன தப்பு செஞ்சேன்... போலீசார் பிடியில் "கூமாப்பட்டி பிரபலம்".. கதறும் இளைஞர்..!