‘கிராண்ட்பாதர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..! கலக்கல் கதாபாத்திரத்தில் தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர்..!
தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கரின் கலக்கல் கதாபாத்திரத்தில் உருவாகும் ‘கிராண்ட்பாதர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை புரிந்துகொண்டு நடித்து, மக்கள் மாத்தியில் மிகுந்த மதிப்பைப் பெற்றவர் தான் எம்.எஸ்.பாஸ்கர். சிறிய வேடங்களிலிருந்தே தன்னை நிரூபித்த இவர், சமீபத்தில் 2023-ம் ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் தனது மனதை உலைக்கும் நடிப்புக்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில், அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘கிராண்ட்பாதர்’ பற்றிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருதுக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் என்பதால், இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்க ‘கிராண்ட்பாதர்’ என்ற தலைப்பிலேயே மனதைக் கவரும் இந்த திரைப்படம், குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் இயக்குநராகவும் இணை நடிகராகவும் களமிறங்கி இருப்பவர் பிராங் ஸ்டார் ராகுல். இந்த திரைப்படம், நகைச்சுவையையும், திகிலையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கியதாக இருக்கப்போகிறது. இதன் கதையும், காட்சிப்படுத்தும் முறையும் பாரம்பரிய தாத்தா மற்றும் தன்னை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஒரு மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடன் இணைந்து, பிராங் ஸ்டார் ராகுல் கூட முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரங்களை ஏற்றுள்ளனர். குறிப்பாக, முனீஸ்காந்த் மற்றும் அருள் தாஸ் போன்றவர்களின் கதாபாத்திரங்கள், நகைச்சுவைக்கு தூணாகவும், பாஸ்கரின் கதாபாத்திரத்திற்கு சவாலாகவும் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இவர் மலையாள திரைத்துறையில் பல உணர்ச்சி மிகுந்த பாடல்களை வழங்கியவர். தமிழில் இது அவருடைய முக்கியமான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. ‘கிராண்ட்பாதர்’ திரைப்படத்தில் அவர் வழங்கும் பின்னணி இசை மற்றும் பாடல்கள், கதையின் உணர்வுப் பரிமாணங்களை உயர்த்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது படக்குழு. தற்போது படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் அமானுஷத்தில் மிரள விட்ட ராகவா லாரன்ஸ்..! தெறிக்கவிடும் புல்லட் படத்தின் டீசர் வெளியீடு..!
படக்குழுவினர் கூறுகையில், பாஸ்கரின் நுட்பமான நடிப்பு, குழுவினரின் ஒற்றுமை மற்றும் நேர்த்தியான தயாரிப்பு நிர்வாகம் மூலம், படப்பிடிப்பு முழு வீச்சில் சீராக நடைபெற்று வருகிறதாம். இந்த சூழலில் தன்னுடைய சிறந்த நடிப்புக்காக தேசிய விருது வென்ற எம்.எஸ். பாஸ்கரை, படக்குழுவினர் ஒருகட்டமாக புகழ்ந்து, பாராட்டு விழா ஏற்பாடு செய்தனர். அவருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அவரை கௌரவிக்கும் விதமாக, அந்த வேளையில் ‘கிராண்ட்பாதர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பும் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக்கில், பாஸ்கர் ஒரு தாத்தா வேடத்தில், பக்கவாட்டில் சிறு புன்னகையுடன், கண்களில் நிறைந்த அனுபவமும், நினைவுகளும், கணிக்க முடியாத ஒரு திகிலும் கொண்டு தோன்றுகிறார். அவரின் தோற்றமே படம் ஒரு மனதை தொடும் குடும்பக் கதையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியதும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆகவே ‘கிராண்ட்பாதர்’ திரைப்படம், ஒரு நினைவூட்டும் குடும்பக் கதையாக, நகைச்சுவையையும், உணர்வையும், மனசாட்சியையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் படமாக உருவாகிறது. இதில் MS பாஸ்கர் தனது வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான உச்சியை தொட்டுள்ளார் என்பது உறுதி. மேலும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதால், ரசிகர்கள் இதனை வெறும் பொழுதுபோக்காக அல்ல மனதையும் தொட்டுவிடும் அனுபவம் என எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியானது சூரியின் "மாமன்" படம்..! விடுமுறை நாட்களில் வெளியானதால் குஷியில் குட்டீஸ்கள்..!