×
 

லாக்கப்பில் போலீஸ் எப்படி அடிப்பாங்க தெரியுமா.. தனது அனுபவத்தை நடு நடுங்க பேசிய நடிகர் ஜெய்..!

நடிகர் ஜெய் லாக்கப்பில் போலீசார் அடி குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

தற்பொழுது தமிழகத்தையே மிகவும் உலுக்கி வரும் சம்பவம் என்றால் அதுதான் சிவகங்கை கோவில் காவலாளி அஜித் குமாரின் மரண வழக்கு.. காவல்துறையினரின் பிடியில் இருந்த அஜித் குமார் போலீஸ் பிடியில் இருக்கும் பொழுதே மரணம் அடைந்த சம்பவம் தற்பொழுது பூதாகரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அனைவரது மனதிலும் வார்த்தையிலும் தற்பொழுது இருக்கும் படம் என்றால் அதுதான் "ஜெய் பீம்" திரைப்படம்.

கோவில் காவலாளி அஜித் குமாரின் மரணத்தை குறித்து மக்கள் பரவலாக பேசும் பொழுது ஜெய் பீம் படத்தைப் போன்றே இப்பொழுது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என பேசி வருகின்றனர். கோவிட் லாக் - டவுன் சமயத்தில் அனைவரது மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் "ஜெய் பீம்". அத்திரைப்படத்தில் பாம்பு பிடிக்க வந்த ராஜாகண்ணு நகையை திருடி விட்டதாக ஒருவர் புகார் கொடுக்க, உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்ட போலீசார் ராஜா கண்ணுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நகை திருடியதாக ஒப்புக் கொள்ளும்படி கூறி, அடித்து உதைத்திருப்பர்.

இதையும் படிங்க: தனது மனைவி பிரிவை தாங்க முடியல.. தற்கொலைக்கு முயன்ற நடிகர் அமீர்கான்.. ரசிகர்கள் ஷாக்..!

மேலும் சித்திரவதை செய்து அவர் மரணிக்கும் காட்சிகள் அனைத்தும் அனைவரது மனதையும் வேதனை படுத்தும் வகையில் இருந்தது. அது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் நியாயத்திற்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, "ஆநீதிக்கு எதிரான நீதி மன்றத்தின் மௌனம் ஆபத்தானது" என சொல்லும் பொழுது ஒரு கணம் அனைவரது கண்களும் கலங்கி இருந்தது. இப்படி ஒரு படத்தின் சம்பவம் தான் தற்பொழுது இங்கு நிகழ்ந்துள்ளது. அதேபோல் 'விசாரணை' என்ற திரைப்படத்திலும் லாக்கப்பில் நடக்கும் அட்டூழியங்களை வெளிப்படுத்தும் வகையில் அத்திரைப்படமும் அமைந்திருந்தது. இந்த சூழலில் 2002 ஆம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "பகவதி" படத்தில் அவருக்கு சகோதரனாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஜெய்.

இதனை அடுத்து, யுகா, சென்னை 600028, சுப்ரமணியபுரம், வாமணன், அதே நேரம் அதே இடம், கோவா, கனிமொழி, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், கோ, ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், வலியவன், இது நம்ம ஆளு, தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும், புகழ், சென்னை 600028 பார்ட் 2, பலூன், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜருகண்டி, கலகலப்பு 2, மதுர ராஜா, கேப்மாரி, நீயா 2, எண்ணித்துணிக, பட்டாம்பூச்சி, காப்பி வித் காதல், குற்றம் குற்றமே, வீரபாண்டியபுரம், தீரா காதல், அன்னபூரணி, காக்கி, பேபி அண்ட் பேபி  முதலான படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெய் இசையமைப்பாளர் தேவாவின் நெருங்கிய உறவினர் ஆவார். 

இப்படி பல படங்கள் காமெடியாக நடித்து வந்த நடிகர் ஜெய் தற்போது மிகவும் அர்த்தமுள்ள ட்டெரரான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் தற்பொழுது  இயக்குனர் பாபு விஜய் தயாரித்து இயக்கிய ரொமான்டிக் கலந்த திரில்லர் திரைப்படமான " சட்டென்று மாறுது வானிலை" படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் ஜெய். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீமன், யோகி பாபு, ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சூழலில் சமீபத்தில் நடிகர் ஜெய் லாக்கப்பில் போலீசாரிடம் அடி வாங்கும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனைப் பார்த்த பலரும் நடிகர் ஜெய்  காவல் துறையினரிடம் சிக்கி இருப்பதாகவும் இது எந்த மாதிரியான படமாக இருக்கும் எனவும் பரவலாக பேசிக் கொண்டு இருந்தனர். 

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து பேசிய நடிகர் ஜெய், " இந்தப் படத்தினுடைய ஸ்டில்கள் வெளியான பொழுது  மிகவும் வைரலானது. உண்மையிலேயே தற்பொழுது அஜித் குமாரின் மரணம் எனக்கு வேதனை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நான் நடித்த பொழுது மிகவும் பதற்றம் அடைந்தேன். இப்படி ஒரு பதற்றத்தை இதுவரை என் வாழ்நாளில் நான் கண்டதே கிடையாது. ஏனெனில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் அடி வாங்கும் காட்சிகளில் என்னை அறியாமலேயே எனது உடல் நடுங்கியதை நான் உணர்ந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் தற்பொழுது சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது. பொதுவாக மனதை தாக்கும் கதைகளில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அதன்படி தான் என் திரைப்படங்கள் அனைத்தும் அமைந்து வருகிறது" என தெரிவித்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களை போன்ற பல பிரபலங்களும் இதற்காக குரல் கொடுத்தால் விரைவில் தண்டனை கிடைக்கும் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தனது அப்பாவுடன் சண்டை.. வீட்டைவிட்டு வெளியேறிய நடிகர் விஜய்..! பரபரப்பு பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share