×
 

சாதியை பார்க்கும் விஜய் டிவி நிறுவனம்..! தனக்கு நடந்த அநீதி.. வெளிச்சம் போட்டு காட்டிய நாஞ்சில் விஜயன்..!

நாஞ்சில் விஜயன், விஜய் டிவி நிறுவனம் ஜாதியை பார்த்து செயல்படுகிறது என பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி உலகின் பிரபலமான காமெடியன் மற்றும் விஜய் டிவியின் முக்கிய கலைஞர்களில் ஒருவரான நாஞ்சில் விஜயன், சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான புகாரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 15 ஆண்டுகளாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது காமெடியான நடிப்பின் மூலம் மக்களை மகிழ்த்துவரும் நாஞ்சில் விஜயன், இப்போது ஒரு தனிப்பட்ட, ஆனால் பரபரப்பான செய்தியை காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படி இருக்க தனது இன்ஸ்ட்டாகிராம் பதிவில், நாஞ்சில் விஜயன், “ஹலோ மிஸ்டர் விஜய் டிவி சமூக வலைதள அட்மின், நான் கடந்த 15 வருடமாக விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறேன். யாரும் போட தயங்கும் பெண் வேடத்தையும் நான் துணிச்சலாக செய்தேன். மக்களை மகிழ்விக்கிறேன். நம் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய சில கலைஞர்களுக்கு, கடந்த வாரம் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்தீர்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் இருந்தன. ஆனால் என் பிறந்த நாளும் கடந்த வாரம் தான் நடந்தது. ஆனால் எனக்கு ஒரு வாழ்த்து நீங்கள் கூறவில்லை. அது ஏன் மறந்து விட்டீர்களா, இல்லையேல் ஒதுக்கி விட்டீர்களா? அந்த காலத்தில் ஒருவரின் தொழிலை வைத்து, உயர்ஜாதி, கீழ் ஜாதி என்று பிரித்தார்கள். இப்பொழுது நீங்கள் செய்யும் செயல்பாடும் அதே போல் இருக்கிறது. தொலைக்காட்சியில் உச்ச புகழ் பெற்ற கலைஞர்களை உயர்ஜாதியாகவும், எனது போன்று அங்கீகாரம் கிடைக்காத கலைஞர்களை கீழ்ஜாதியாகவும் பார்க்கிறீர்கள்.

இதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. மேலும் இந்த நிகழ்வு, விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் இப்படிப்பட்ட முடிவுகளை, சமூக வலைதளத்தை பார்ப்பதற்குரிய அட்மின் தான் முடிவெடுக்கிறார். மற்ற அதிகாரிகளுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு. இதெல்லாம் ஒரு விஷயமா கடந்து போ, நாஞ்சில் விஜயன் என்று சொல்கிறேன். இப்படித்தான் பல இடங்களில் நம் உரிமைகளை நாம் பெற மறுக்கிறோம். நம் உரிமையை நாம் தான் கேட்டு வாங்க வேண்டும்” என காட்டமாக பதிவிட்டார். இந்த புகார், சமூக வலைதளத்திலும், ரசிகர்கள் வட்டாரங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நாஞ்சில் விஜயனின் பதிவுக்கு பிறகு, விஜய் டிவி அதிகாரிகள் மற்றும் அட்மினின் செயல்முறைகள் குறித்து கடும் கவலைத் தோன்றியுள்ளது. சமூக ஊடகங்களில் பல ரசிகர்கள், “நாஞ்சில் விஜயன் சொன்னது உண்மை, உயர்ஜாதி, கீழ் ஜாதி போலவே கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது சரியில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: என்னங்க மேடம் இப்படியாகிடிச்சு..! ஒரே பெட்டிஷனில் பறிபோன தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு.. கடுப்பில் நடிகை சந்திரா..!

அதே நேரத்தில் சிலர், “நடிகர் தனது உரிமையை கேட்கும் உரிமை உள்ளது” என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படியாக விஜய் டிவியில் பல வருடங்களாக பணிபுரியும் நாஞ்சில் விஜயன், அவரது காமெடி கலைக்காக மட்டுமல்லாமல், கலைஞர்களின் நேர்மையான அங்கீகாரத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையையும் எடுத்துரைக்கிறார். அவர் தெரிவித்த புகார், தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சமூக வலைதள மேலாண்மையை மற்றவர்களுக்கு தெரிந்துகொள்ளும் விதமாகவும், வெளிப்படையான விவாதத்தை உருவாக்கும் விதமாகவும் உள்ளது. இதனை தொடர்ந்து, விஜய் டிவி நிர்வாகம் தனது அட்மின் செயல்முறைகள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்து நடைமுறைகள் குறித்து ஆராய்ச்சி நடத்துவதாகவும், சமூக வலைதளத்தில் நடைபெறும் இந்த கலகலப்பான விவகாரத்தை சமாளிக்கும் வழிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகவுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், நாஞ்சில் விஜயனின் புகார், தமிழ் தொலைக்காட்சி உலகில் பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது. ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி வட்டாரங்களில், வெளிப்படையான உரிமை, சமமுள்ள அங்கீகாரம், மற்றும் அதிகாரிகளின் நேர்மையான நடைமுறை ஆகியவைகளுக்கு பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம், தமிழ் தொலைக்காட்சி உலகில் பிரபல கலைஞர்கள் மற்றும் நிறுவன நிர்வாகிகள் இடையே உரிமை, அங்கீகாரம், மற்றும் சமநிலை தொடர்பாக புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: 120 விருதுகளை அசால்ட்டாக வென்ற "தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்" படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share