2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்..! வெற்றியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து..!
தேசிய திரைப்பட விருதுகளை பெற்ற திரைப்பட கலைஞர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டன. வருடந்தோறும் இந்திய சினிமாவின் மிக உயரிய மற்றும் கௌரவமான விருதாகக் கருதப்படும் இந்த விருதுகள், நாடெங்கிலும் இருந்து சிறந்த படைப்பாளிகளையும், திரைப்படங்களையும் கவுரவிக்கின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலில் தமிழ்த் திரைப்படங்கள் தனியொரு இடத்தைப் பிடித்துள்ளன. குறிப்பாக, தமிழ் சினிமாவிலிருந்து "பார்க்கிங்" திரைப்படம் மூன்று முக்கிய விருதுகளை வெல்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியையடுத்து, இந்திய திரைப்பட உலகின் புகழ்பெற்ற நடிகரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல்ஹாசன், தேசிய விருது வென்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
அவரது பதிவில், "2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் என மொத்தம் 3 விருதுகளை 'பார்க்கிங்' திரைப்படம் வென்றிருக்கிறது என்பது மிகுந்த படி நம்மை பெருமைப்படுத்தும் செய்தியாகும்" எனக் கூறியுள்ளார். அவரது பதிவின்படி, ‘பார்க்கிங்’ திரைப்படம் தமிழ் மொழியில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது. இதில், திரைப்படத்தின் திரைக்கதை எழுதியும், இயக்கியுமுள்ள ராம்குமார் பாலகிருஷ்ணன் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளார். மேலும், பிரபல நடிகரும், பாராட்டைப் பெற்ற கலைஞருமான எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகராக தேர்வாகியுள்ளார். இந்த படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனத்தின் சினிஷ் ஸ்ரீதரனுக்கும், பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுதன் சுந்தரத்துக்கும் கமல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, "வாத்தி" திரைப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ், இந்த ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றுள்ளார். இசைத் துறையில் தனது தனித்துவமான பங்களிப்பால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்திருக்கும் ஜி.வி. பிரகாஷுக்கு, “தம்பி ஜி.வி. பிரகாஷ குமார்” என அன்போடு குறிப்பிடும் வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். மேலும் மலையாள மொழித் திரைப்படமான “உள்ளொழுக்கு” திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகையாக தேர்வாகியுள்ள நடிகை ஊர்வசிக்கும் கமல்ஹாசன் தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார். தமிழ் சினிமாவிலும், மலையாள சினிமாவிலும் தடம் பதித்துள்ளார் ஊர்வசி, இம்முறை தனது கதா பாத்திரத்துடன் தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார். மேலும், ஆவணப்படம் வகையில் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோரையும் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இவர்கள் இருவரும் "லிட்டில் விங்ஸ்" ஆவணப்படத்திற்காக இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர். இப்படி இருக்க இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தமிழ் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸுக்கும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஷாருக்கான் "ஜவான்" மற்றும் "பத்தான்" போன்ற வெற்றிப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். விக்ராந்த் "பகத singh nagar" படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: ஷாருக் கானுக்கு ‘ஜவான்’ படத்துக்காக தேசிய விருது..! கையில் கட்டுடன் அட்லீ-க்கு நன்றி செலுத்தும் வீடியோ வெளியீடு..!
இதேபோல், சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ள பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கும் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். “மர்த்தா” என்ற படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மிகுந்த பாராட்டைப் பெற்றிருந்தது.
கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், " பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும். வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக "என அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த ஆண்டின் தேசிய திரைப்பட விருதுகள், தமிழ் சினிமாவுக்கே பெருமையை ஏற்படுத்தியுள்ளன. ‘
பார்க்கிங்’, ‘வாத்தி’, மற்றும் ‘லிட்டில் விங்ஸ்’ போன்ற படங்களின் வெற்றி, உள்ளார்ந்த தரம், செம்மையான கதை சொல்லல், மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் பிரதிபலிப்பாக கருதப்படுகிறது. இது போன்ற வெற்றிகள், எதிர்காலத்தில் இன்னும் பல புதுமையான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்பது நிச்சயம். இந்திய நாட்டின் திரைப்படத் துறையில் தமிழ்த்திரைப்படங்கள் தனி இடத்தை வகிக்கின்ற இந்த நேரத்தில், நடிகர் கமல்ஹாசனின் பாராட்டுக்கள், அந்நிகழ்வுக்கு ஒரு சிறப்பும், மகிழ்ச்சியும் சேர்த்துள்ளது.
இதையும் படிங்க: CWC-6க்கு நேரடி போட்டியாக களமிறங்கும் "டாப் குக்கு டூப் குக்கு" சீசன் 2..! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!