×
 

குடும்பத்துடன் Play Time..!! நடிகை நயன்தாரா வெளியிட்ட கலக்கல் புகைப்படங்கள்..!

நடிகை நயன்தாரா குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தைப் பெற்றுத் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா, தனது தொழில்முறை சாதனைகளோடு சேர்த்து தனிப்பட்ட வாழ்க்கையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தென்னிந்திய திரைப்படங்களில் பல்வேறு வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்த அவர், தற்போது பான்-இந்தியா அளவில் தனது பாதையை விரிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சாதனை படைத்த ரஜினியின் 'ஜெயிலர் 2'..!! ரிலீஸுக்கு முன்பே பலகோடியில் ஒப்பந்தம்..லாபம் பார்த்த படக்குழு..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஏற்கனவே வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டுள்ள நயன்தாரா, சமீப ஆண்டுகளில் ஹிந்தி திரையுலகிலும் தனது தடத்தை பதிக்க தொடங்கியுள்ளார்.

குறிப்பாக, இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமானது, அவரது கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

அந்த படம் உலகளவில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், நயன்தாராவுக்கும் புதிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் ஹிந்தி திரையுலகில் மேலும் பல வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாதிருந்தாலும், இப்படியான கூட்டணி உருவானால் அது பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் என்பது உறுதி.

திரைப்படங்களைத் தாண்டி, தனது குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தி வரும் நயன்தாரா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனிப்பட்ட தருணங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பதும் வழக்கம்.

குறிப்பாக, தனது இரட்டை மகன்களுடன் இருக்கும் அழகிய தருணங்களை அவர் பகிரும்போது, அது ரசிகர்களிடையே விரைவாக வைரலாகிறது.

அந்த வகையில், சமீபத்தில் நயன்தாரா தனது மகன்களுடன் மகிழ்ச்சியாக விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வசூலில் Half-century அடித்த பிரதீப் ரங்கநாதனின் LIK..!! மகிழ்ச்சியில் புது அப்டேட் கொடுத்த படக்குழு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share