சர்ப்ரைஸ் இங்க இருக்கு.. ஆனா வாங்கவேண்டிய மனைவி இல்லை.. கவுண்டமணி வேதனை..!
மனைவிக்காக உருவாக்கிய பலமாத சர்ப்ரைஸை அனுபவிக்க முடியாமல் சென்ற சாந்தியை நினைத்து வேதனைப்பட்டு வருகிறார் கவுண்டமணி.
நடிகர் கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணியன் கருப்பையன். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்த சுப்ரமணியன் ஊர் நாடகங்களில் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவுண்டமணி என பெயர் பெற்று 1964-ஆம் ஆண்டு 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தில் கிடைத்த சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையில் பிரபல நகைச்சுவை கலைஞராக உருவெடுத்தார். இவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவ ஆரம்பித்தது.
இதுவரை நடிகர் கவுண்டமணி 750 படங்களில் நடித்துள்ளார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், நெஞ்சில் துணிவிருந்தால், நெற்றிக்கண், பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், நான் பாடும் பாடல், உதய கீதம், மருதாணி, இதய கோயில், மண்ணுக்கேத்த பொண்ணு, மிஸ்டர் பாரத்,கரகாட்டக்காரன், அன்பு கட்டளை, வேலை கிடைச்சுடுச்சு, பெரிய இடத்து பிள்ளை, சின்ன தம்பி, புது மனிதன், சேரன் பாண்டியன், என் ராசாவின் மனசிலே, பிரம்மா, ஆயுள் கைதி, சின்ன கவுண்டர், சிங்காரவேலன், தெற்கு தெரு மச்சான், தேவர் மகன், மன்னன், ஊர் மரியாதையை, பங்காளி, மகராசன், ஜென்டில்மேன்,
இதையும் படிங்க: துணைவியாரை இழந்த சோகத்தில் கவுண்டமணி..! தகனம் செய்யப்பட்ட மனைவியின் உடல்..!
எஜமான், பொன்னுமணி, பேண்டு மாஸ்டர், ரசிகன், சாது, ஜெய் ஹிந்த், சேதுபதி I.P.S, நாட்டாமை, முறை மாப்பிள்ளை, முறை மாமன், முத்து குளிக்க வாரீயளா, பெரிய குடும்பம், கர்ணா, மேட்டுக்குடி, உள்ளதை அள்ளித்தா, இந்தியன், கோயம்பத்தூர் மாப்ளேபரம்பரை, ஜானகிராமன், நேசம், ரெட்டை ஜடை வயசு, தென்மாங்கு பாட்டுக்காரன், அவள் வருவாளா, காதலர் தினம், அழகர்சாமி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன் வருவான், அழகான நாட்கள், சமுத்திரம், பரசுராம், சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இப்படி இருக்க, கவுண்டமணியின் மனைவி சாந்தி, அந்த காலத்திலேயே இவரை காதல் திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி, மே மாதம் 5ம் தேதி காலை 10:30 மணியளவில் சென்னையில் காலமானார். சாந்தியின் உடல் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் செந்தில், சத்தியராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிரகாஷ்ராஜ், கார்த்தி என பலரும் அவரது மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் இறுதிச்சடங்கின் பொழுது வந்த கூல் சுரேஷ் அழுத படி குத்தாட்டம் போட்டார். மேலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கவுண்டமணியை நேரில் சென்று ஆறுதல் கூறி சென்றார்.
இப்படி இருக்கையில், தனது மனைவியின் ஆசையை கடைசி வரைக்கும் நிறைவேற்ற முடியவில்லை என நடிகர் கவுண்டமணி வேதனை தெரிவித்துள்ளார். அதன்படி, தனது அன்பான மனைவிக்காக அழகாக பெரிய வீட்டை கட்டி வந்துள்ளார் கவுண்டமணி. அங்கு தனது மனைவியுடன் குடியேற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த அவருக்கு சாந்தியின் மரணம் வேதனை அளிப்பதாக இருந்துள்ளது. மேலும் கடைசி வரையிலும் மனைவியுடன் புதுவீட்டில் காலடி எடுத்து வைக்கும் தனது கனவு நிறைவேறாத ஆசையாக மாறிவிட்டது என கவுண்டமணி தனது வேதனையை கண்ணீருடன் தெரிவித்து வருகிறார்.
இதையும் படிங்க: இதழின் ஒரு ஓரம் சிரிப்பால் மயக்கும் கயாடு லோஹர்..! ஆடை அழகில் அசத்தும் சென்சேஷ்னல் நடிகை..!