×
 

பான் இந்தியா ஸ்டாராக மாறிய ரெடின் கிங்ஸ்லி..! தனது வெற்றிக்கு காரணமானவர்களை குறித்து நடிகர் ஓபன் டாக்..!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பாண் இந்தியா ஸ்டாராக மாறி வருவதற்கு காரணமானவர்களை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது பான் இந்தியா படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ஆரம்ப காலத்தில் விஜய் சேதுபதி, விமல் மற்றும் யோகிபாபு போல் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கியவர். பின் கொஞ்சம் முன்னேறி குரூப் டான்ஸராகவும் நடனமாடியுள்ளார். குறிப்பாக "அவள் வருவாளா" என்ற அஜித்தின் திரைபடத்தில் இடம்பெற்ற 'ருக்கு ருக்கு' பாடலில் ஆடியுள்ளார் ரெடின் கிங்ஸ்லி. பின்னர் இவரது திறமையை பார்த்த இயக்குநர் நெல்சன், கிங்ஸ்லியை அனைவரும் பார்க்கும் படி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

அதுமட்டுமல்லாமல், நயன்தாரா, ஜாக்லின், யோகிபாபு என பல நடிகர்கள் நடித்த "கோலமாவு கோகிலா" படத்தில் கேங்ஸ்டருடன் இணைந்து காமெடி நடிகராக அறிமுகமான ரெடின், தொடர்ந்து எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். இத்தனை படங்கள் இவர் நடித்திருந்தாலும் நெல்சன் இயக்கிய "டாக்டர்" திரைபடத்தில் தனது அபார காமெடி திறமையை வெளிப்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றார். முன்பு பட வாய்ப்புகள் தேடி அலைந்தவருக்கு இன்று வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. அந்த அளவிற்கு புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இப்படி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை சினிமாவில் ஆரம்பித்த இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து மாஸ் காட்டி வருகிறார்.

இப்படி இருக்க மலையாளத்தில், பிரபல நடிகர் நிவின் பாலி மற்றும் நயன்தாரா நடித்துவரும் புதிய படத்தில் நகைச்சுவை ரோலில் பிஸியாக நடித்து வருகிறார் கிங்ஸ்லி.  சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விஷால் நடிப்பில் கலக்கி நல்ல வரவேற்பைப் பெற்ற கிங்ஸ்லியின் காமெடி ஹைய்லைட்ஸ், சமூக வலைதளங்களில் மீம்ஸ் மற்றும் சினிமா விமர்சனங்களில் அதிகமாக பேசப்பட்டது. "முதலாளி... நான் தான் காமெடி பீஸ்" எனும் அவரது வசனம் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. இப்படியாக அவரின் வளர்ச்சி, தன்னம்பிக்கை, நடிப்புத் திறமை, மற்றும் ஹ்யூமர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: அரசியலுக்கு வருவதற்கான முதற்கட்ட முயற்சியில் பிரபல நடிகர்..! ரஜினி, விஜய் பாதையில் இப்போது தனுஷ்...! 

சிறிய நகைச்சுவை வேடங்களில் ஆரம்பித்து, இன்று தமிழைத் தாண்டி பல மொழிகளில் இடம் பிடித்து இருக்கிறார். தற்போதைய வளர்ச்சி குறித்து நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசும்போது, தன்னுடைய வெற்றிக்கு காரணமான ஒவ்வொரு நபரையும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதன்படி அவர் பேசுகையில், "தமிழ் தாண்டி பிற மொழிகளிலும் நடிப்பது எனக்கு பெரும் சந்தோஷத்தை தருகிறது. அந்த அளவுக்கு என் கலைக்குத் கிடைத்த அங்கீகாரம் என்பதை உணர்கிறேன். உண்மையும் உழைப்பும் இருந்தால் யாரும் முன்னேறலாம். எனக்கு வாய்ப்பு அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றியுடன் இருக்கிறேன். ரசிகர்களை மகிழ்விப்பதே என் முக்கிய பணி. அவர்கள் புன்னகையில் தான் என் வெற்றியும் இருக்கிறது" என நெகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார். ஆகவே தனது தனித்துவமான நடிப்புத் திறமையால், தமிழ் திரையுலகில் இருந்து இந்திய அளவிலான திரையுலகிற்கு பறக்கத் தொடங்கியுள்ள ரெடின் கிங்ஸ்லி, இப்போது ஒரு பான் இந்திய காமெடி நடிகராக உருவெடுத்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாது, ஒரு மகிழ்ச்சியின் தூதராகவும், நகைச்சுவையின் புது முகமாகவும் அவர் ரசிகர்களிடையே தனது அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.

உண்மையில் நகைச்சுவை என்பது ஒரு தன்னலமற்ற சேவை. மக்களை சிரிக்க வைப்பது எளிதான காரியமல்ல. அந்த கடினத்தை ஒரு வாழ்வாக எடுத்துக்கொள்வதே என் சாதனை என அவர் கூறுவதே, அவரின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தினமும் புதுசு புதுசா பரோட்டா செய்து கொடுத்த விஜய் சேதுபதி..! முகம் சிவக்க நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share