×
 

எல்லைல இடத்துக்கு சண்டை.. சினிமால "ஆப்ரேஷன் சிந்தூர்" பெயருக்கு சண்ட.. உருப்படுமா..!

நாடே பதட்டத்தில் இருக்கும் இந்த வேளையில் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் ஆப்ரேஷன் சிந்தூர் பெயருக்கு சண்டையிட்டு வருகிறது.

எல்லாத்துலயும் பணம் சம்பாதிக்க பார்த்தால் என்னதான் சொல்லுவது. ஒருபக்கம் தன் பாடலை தொட்டாலே கரண்ட் ஷாக் அடிக்கும் அளவுக்கு உரிமை கோரும் இளையராஜா. அதேபோல் பட கதைகளை தொட்டால் பதறி போய் உரிமை கோரும் இயக்குனர்கள். மறுபக்கம் எல்லைகளை கடந்தாலும் ஆக்ரமிக்க நினைத்தாலும் கரண்ட் ஷாக்கை விட மோசமான அளவுக்கு பல பிரச்சனைகள் இன்று நம் மத்தியில் அரங்கேறி வருகிறது. இதில் தனது நாட்டு மக்கள் 26 பேரை சுட்டு கொன்றதற்கு இரவு பகல் பாராமல் பார்டரில் நம் இந்திய ராணுவ வீரர்கள் சண்டையிட்டு வந்தால், இங்கு ஜாலியாக ஏசியில் உட்கார்ந்திருக்கும் அதிமேதாவிகள் சிலர். இதனை படமாக்கினால் கொள்ளை லாபம் ஈட்டலாம் என சொல்லி, இந்த சண்டைக்கு ராணுவம் வைத்த பெயரை சொந்தமாக்க போராடி வருகின்றனர். 

இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க "ஆப்ரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் ராணுவம் நடத்திய ஸ்பெஷல் ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தாலும் அந்த பெயருக்கான சண்டை சினிமாவில் இன்று நடந்து வருகிறது. இந்த பெயர் வர காரணம், காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.  இவர்களை அடியோடு அழிக்கவும் சுட்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் இந்திய ராணுவம் வைத்த பெயர் தான் இந்த "ஆப்ரேஷன் சிந்தூர்".

இதையும் படிங்க: இந்தியா நடத்திய தாக்குதலுக்கு இப்படி ஒரு பதிவா..! அனைவரது கவனத்தையும் ஈர்த்த NTR..!

இந்த "ஆப்ரேஷன் சிந்தூர்" ஆக்ஷனுக்கு பிறகு பாகிஸ்தான் மூன்று நாட்களாக விடாமல் இந்தியாவை பழிவாங்க தனது ட்ரோன்களை காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து தனது தாக்குதலை நடத்தியது. இதனை சுதாரித்த இந்திய ராணுவம் தனது வான்வழி தாக்குதலால் அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த முரளி நாயக்கின் தியாகம் தற்பொபலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் போர் பதற்றம் நிலவி வருவதால் மக்களை பாதுகாக்கும் பணியில் அரசாங்கமும் ராணுவமும் முயற்சி செய்து வருகிறது. 

ஆனால் இதனை பற்றி துளியும் கவலை படாத பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் "ஆப்ரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் படம் எடுக்க முயற்சித்து வருகின்றனர். இதில் ராணுவ பின்னணியில் உள்ள படங்களைத் தயாரிப்பதில் கிங்காக இருக்கும் நார்த் மேக்கர்ஸ், டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் முதல் 15  தயாரிப்பு நிறுவனங்கள் "ஆப்ரேஷன் சிந்தூர்" என்ற பெயருக்கு உரிமை கோரி போராடி வருகின்றனர். இந்த 15 விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, இந்த பெயர் யாருக்கு கொடுக்கலாம் என்பது முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முதலில் இந்த லிஸ்டில் பிரபல பணக்காரரான அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் விண்ணப்பித்து இருந்தது. ஆனால் ராணுவத்தினருடைய தியாகமும், உங்களின் தேச பக்தியும் பணத்தை நோக்கமாக கொண்டது தானா.. என சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வர அவர்கள் பின் வாங்கினர். 

ஆனால், மற்ற நிறுவனங்கள் எங்களுக்கு தேசபக்தி, ராணுவ வீரர்களின் தியாகம் எல்லாம் இரண்டாவது தான் முதலில் பணம் தான் என பெயருக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.  
 

இதையும் படிங்க: கொடுத்த வாக்கை காப்பாற்றியது இந்தியா..! முதல்முறையாக மத்திய அரசை பாராட்டிய நடிகர் பிரகாஷ் ராஜ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share