×
 

இப்படியெல்லாம் ஒரு பப்ளிசிட்டி தேவையா..! பிரபலங்களை பயமுறுத்தும் ஏர்போர்ட் புகைப்படங்கள் - ஷோபா டே காட்டம்..!

ஷோபா டே, பிரபலங்களை பயமுறுத்தும் ஏர்போர்ட் புகைப்படங்கள் என காட்டமாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இன்றைய ஹிந்தி திரைப்படத் துறையில், நடிகர்-நடிகைகளின் தனிப்பட்ட பிரபலப் படங்கள் paparazzi culture என்ற முறையில் பெரிதும் பேசப்படும் விஷயமாகி விட்டது. புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக விமர்சகர் ஷோபா டே, இப்படியாக மாறிவரும் கலாசாரத்தை பற்றி தெளிவாக விமர்சித்துள்ளார். அதன்படி 'மோஜோ ஸ்டோரி' நிகழ்ச்சியில் பற்கா தத் உடன் நடந்த உரையாடலில், ஷோபா டே, பிரபலங்களின் புகைப்படத்தை ஃபேமஸ் ஆக்கும் செயல்களில் மிகவும் முக்கியமான பகுதியாக ஏர்போர்ட் புகைப்படங்கள் செயல்படுகின்றன என்றார். குறிப்பாக “பேப்பராசிகள் சும்மா எங்கும் வந்துவிடுவதில்லை. அவர்களை அழைக்கிறார்கள்.

நடிகர்-நடிகைகளின் மேலாளர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு ‘ஏர்போர்ட் பேப்பராசி’ குழு இருக்கிறது,” என்று கூறிய ஷோபா டே, இங்கு ஒரு திட்டமிட்ட விளம்பர யுக்தி நடந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டினார். முந்தைய தலைமுறையினரான நடிகர்கள் பற்றி பேசிய ஷோபா டே, “அந்தக் காலத்தில் நடிகர்கள் ‘சிறப்புக் குழுக்கள்’ வைத்திருந்தனர். அவர்கள் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு பேட்டி ஏற்படுத்துவது சாத்தியமாக இருந்தது. ஆனால் இப்போது, நடிகர்களை அணுகுவதற்கே பல அடுக்குகளான மேலாண்மை குழுக்களை கடக்க வேண்டியுள்ளது. இது முழுமையாக ஒரு கார்ப்பரேட் மாடலாக மாறியுள்ளது” என்றார். மேலும் இன்றைய காலகட்டத்தில், நடிகர் நடிகைகள் விமான நிலையங்களில் தோன்றும் தோற்றமே அவர்களின் பிரபல நிலையை நிரூபிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது.

இதனை குறித்து தொடர்ந்து பேசிய அவர், “பெரிய நிறுவனங்கள் இப்போது நடிகர்களை அணுகும் முறை, அவர்கள் உடுத்தும் ஆடைகள் மூலம் தான். அந்த ஆடைகள் எல்லாம் பிரபலமான ஸ்டைலிஸ்ட்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரு வணிகம். ஏர்போர்ட் புகைப்படங்கள் வெளிவரவில்லை என்றால், அந்த நடிகர் ஒரு 'நோபடி' என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்,” என கூறினார் ஷோபா டே. அதுமட்டுமன்றி, இளம் நடிகர்கள் சிலர் உண்மையில் விமானம் எதையும் பிடிக்க ஏர்போர்ட்டுக்கு செல்வதில்லை என்றார் ஷோபா டே. அதன்படி “பல இளம் நட்சத்திரங்கள் விமானம் ஏறவே மாட்டார்கள். Uber-இல் தங்கள் பேக்கேஜ்களுடன் ஏர்போர்ட் செல்லிறார்கள். பின்னர், தங்களின் ஊழியர்கள் ஒருவர், விமான நிலையம் வெளியே நிற்கும்போது புகைப்படங்களை எடுத்து, அதை மீடியாவுக்கு அனுப்புகிறார்கள். இதுவும் ஒரு தயாரித்த நாடகம் தான். காரணம் நாம் இப்போது ஹாலிவுட் மாடலை பின்பற்றி, நடிகர்களின் புகைப்படங்களை நிரந்தர விளம்பரத் தளமாக மாற்றியுள்ளோம்.

இதையும் படிங்க: அரவிந்த்-ஆஆ..!!! நவ.21ல் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘Friends’ திரைப்படம்..!! ரசிகர்கள் குஷியோ குஷி..!!

உண்மையான திறமையை காட்டுவதற்குப் பதிலாக, தோற்றத்தை மட்டுமே விற்பனை செய்யும் கலாசாரமாக மாறிவிட்டோம்,” என வருத்தம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஏர்போர்ட் லுக்காக போட்டியிடும் சூழ்நிலையில், புதிய நடிகர்கள் தங்கள் காட்சிப்படுத்தல் திறனை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒவ்வொரு நிகழ்விலும் பிரபலப்படுத்தும் முயற்சியில், உண்மை அடிப்படையில் வளர வேண்டும் என்ற எண்ணம் மறைக்கப்படுகிறது. இளம் நட்சத்திரங்கள் மேடைபோல ஏர்போர்ட் தரையில் நடித்து புகைப்படங்களை வெளியிட்டு, தங்கள் பிரபலத்தைக் காக்க முயற்சிக்கின்றனர். இந்நிலையில், உண்மையான நடிகர் அல்லது நடிகையின் மதிப்பு குன்றிவிட்டதா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. ஷோபா டேவின் இந்த கருத்துக்கள், சமூக வலைத்தளங்களிலும், திரைப்பட உலகிலும் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளன. எனவே ஏர்போர்ட் லுக் – ஒரு தோற்றத்தின் நாடகம் என பார்க்கக்கூடியது.

ஆகவே நடிகர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் எப்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஷோபா டேவின் இந்த பேட்டி மிகப் பெரும் வெளிச்சத்தை வீசியிருக்கிறது. உண்மை, நேர்மை, திறமை போன்றவை பின்புறம் தள்ளப்பட்டு, உருவகப்படுத்தப்பட்ட தோற்றங்கள் பிரபலத்தின் பிம்பமாக மாறும் இக்காலத்தில், சிந்திக்க வைக்கும் விமர்சனமாக இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் அழகை பிரதிபலிக்கும் நடிகை கீர்த்தி செட்டி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share