ரவிமோகனுக்கு இப்படி ஒரு வாழ்த்தா..! பிறந்த நாள் அன்று சுதாகொங்காரா பதிவு வைரல்..!
ரவிமோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்தை பகிர்ந்த சுதாகொங்காரா பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் இடம் பிடித்து வரும் நடிகர் ரவிமோகன், இன்று தனது 45வது பிறந்த நாளை மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார். அவரது நடிப்புப் பயணம், புதிய முயற்சிகள், எதிர்வரும் திரைப்படங்கள் என பல பரிமாணங்களில் திரையுலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இன்று பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இப்படி இருக்க ரவிமோகனின் திரையுலகப் பயணம் எளிதானதல்ல.
சிறிய படங்களில் இருந்து ஆரம்பித்து, தனது அர்ப்பணிப்பு, வியப்பூட்டும் நடிப்பு மற்றும் சமநிலைப்பட்ட நடிப்பால், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவருடைய ஆரம்பக்கால படங்கள் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, ஒரு திறமையான நடிகராக அவரை நிறுவியுள்ளன. இப்படி இருக்க தற்பொழுது ரவிமோகன் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஒரு ஆக்ஷன் காமெடி என கூறப்படுகிறது. இப்படத்தில் ரவிமோகனின் தோற்றமும் கதாபாத்திரமும் முற்றிலும் புதியதாக அமையும் எனக் கூறப்படுகிறது. ரசிகர்களிடம் அவரது புதிய ரூபம் எவ்வாறு வரவேற்கப்படும் என்பதை பொறுத்திருந்து காண வேண்டியுள்ளது. இரண்டாவதாக சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் ரவிமோகன் நடித்து வருகிறார். இது அவரது நடிப்புப் பயணத்தில் ஒரு புதிய படிநிலை எனலாம். ஒரு வில்லனாக அவர் எவ்வாறு மெருகேற்றப்பட்டிருக்கிறார் என்பதைப் பற்றி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பேச்சுகள் பரவத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் நடிப்பிலேயே அல்லாமல், ரவிமோகன் தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதில், ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமாக, இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் ஒரு நகர்புற நாவலூட்டும் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி வருகிறது.
இரண்டாவது படத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு முழுமையான குடும்பக் காமெடி திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது படம் குறித்த விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆனால், அது ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக இருக்கலாம் என்ற கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ரவிமோகனின் பிறந்த நாளை முன்னிட்டு, திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிரடியாக விசாரணைக்கு வந்த நடிகர் ரவிமோகன் வழக்கு..! ஐகோர்ட் உத்தரவால் ஆட்டம் கண்ட ரசிகர்கள்..!
குறிப்பாக, 'பராசக்தி' இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது பதிவில், "படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தைத் தேடுங்கள், அங்கே ரவி இருப்பார், தயாராகி, பதற்றமின்றி, கதாபாத்திரத்திலும் காட்சியிலும் 200 சதவீதம் ஈடுபடுவதைக் காண்பீர்கள்.. என் அழகான ஜென்டில்மேன் நடிகரே, உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. பிறந்தநாள் வாழ்த்துகள், உங்களுக்கு இனிய நாட்கள் அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் பின்னணி, ரவிமோகனின் பணிவும், ஒழுக்கமும், கலைக்கான நம்பிக்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும் ரவிமோகன், தனது படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அமைதியாக, பொறுமையுடன் இருக்கிறார். அவருடைய உடல்மொழி, முகபாவனை, வசனத் திறன் ஆகியவை அவரது கதாபாத்திரங்களை உயிரோட்டமாக கொண்டு வருகின்றன. ரசிகர்கள் மட்டுமல்லாது இயக்குநர்களும் அவரைப் பற்றிய புகழ்ச்சிகளை அடிக்கடி வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் ரவிமோகன் தற்போது பன்முகத் திறமையுடன் நடிப்பிலும், தயாரிப்பிலும் ஈடுபடுவதால், அவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், ஒரு முழுமையான சினிமா ஆளுமையாக மாறி வருகிறார். தமிழ்த் திரைப்பட உலகில் புதிய வாசல்களைத் திறக்கவுள்ளவராகவும் அவரைப் பார்க்க முடிகிறது.
ஆகவே 45 ஆண்டுகள் வாழ்க்கையின் வழியில், பல தடைகள், சவால்கள், வெற்றிகள், தோல்விகள் அனைத்தையும் சமத்துவ மனப்பான்மையுடன் எதிர்கொண்டு, ஒரு நடிகராக, தயாரிப்பாளராகவும் தன்னை உருவாக்கியுள்ள ரவிமோகனுக்கு, இன்று ரசிகர்களிடையே வியப்பூட்டும் மரியாதை கிடைத்துள்ளது. இவ்வாறு பல பரிமாணங்களில் திகழும் ரவிமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: பல பிரச்சனைகளுக்கு நடுவில் சொந்த தயாரிப்பு நிறுவனம்..! அதிரடியாக துவங்கிய நடிகர் ரவிமோகன்..!