×
 

துல்கர் சல்மானின் "லக்கி பாஸ்கர் - 2" பார்க்க ரெடியா..! அதிரடி அப்டேட் கொடுத்த இயக்குநர்..!

அனைவரது கனவாக இருந்த துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் - 2 படத்திற் குண்டான அதிரடி அப்டேட்டை இயக்குநர் கொடுத்திருக்கிறார். 

மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பின் திறமை தற்பொழுது, இவரை 'பேன் இந்தியா ஸ்டாராக, மாற்றி உள்ளது. துல்கர் சல்மானின் எதார்த்தமான பேச்சுக்களும் அவருடைய நடிப்பும், தனக்கு ஏற்றார் போல் கதைகளை தேர்ந்தெடுக்கும் பண்பு ஆகியவற்றால் தனக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி இருக்கிறார்.

இப்படி இருக்க பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களின் அன்பைப் பெற்ற துல்கர் சல்மான், சீதாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், மீனாட்சி சௌத்திரி உடன் நடித்து சமீபத்தில் வெளியான "லக்கி பாஸ்கர்" திரைப்படம்  செம ஹிட் கொடுத்துள்ளது. 1990களில் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, வங்கி ஊழியர் எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்பதை குறித்தும், வறுமையில் இருக்கும் தனது குடும்பத்தை மீட்க என்ன செய்தாலும் தவறு இல்லை என்பதை காண்பிக்கும் வகையிலும் அமைந்த இத்திரைப்படம், கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் ரூ.100 கோடியை கடந்து ஃபாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று வெற்றி படமாக மாறியது.

இதையும் படிங்க: வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன இயக்குநர் அட்லீ..! குஷியில் "பறந்து போ" பட டீம்..! 

இந்த படத்தில் துல்கர் சல்மான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும், இளைஞர்களை உத்வேகப்படுத்துவதாக இருந்து உள்ளது. அது மட்டுமல்லாமல்  ஹர்ஷா மகராவை பற்றியும் அவரது சிந்தனை பற்றியும், அவர் பணம் சம்பாதித்த விதங்களைப் பற்றியும், அவரைப் போல் பணம் சம்பாதிக்க நினைத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்கும். கடைசியில் பிரச்சினையில் சிக்கும் போது அதிலிருந்து வெளியே வர பொறுமையுடன் சிந்தித்து, எந்த மாதிரியான சூழ்நிலைகளை கையாள வேண்டும் என்பதையும் இப்படம் மூலம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்த படம் பலரது கவனத்தையும் பெற்றதுடன் ஓடிடியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் "லக்கி பாஸ்கர்" திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என பலரும் கேட்டு வந்த நிலையில் தற்பொழுது அதற்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லுரி. அவர் பேசுகையில், " லக்கி பாஸ்கர் படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்ததுடன் பலருக்கும் பிடித்த படமாக மாறியுள்ளது. அனைவரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது எடுப்பீர்கள் என்று என்னிடம் கேடிக்கிறார்கள். ஆகவே கண்டிப்பாக லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகத்தை நான் உருவாக்குவதற்கான திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறேன்" என அதிரடியான அப்டேட்டை கொடுத்திருக்கிறார். 

இதனை பார்த்த நடிகர் துல்கர் சல்மானின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: ஃபைனான்சியர் பிடியில் "சப்தம்" படம்..! ஓடிடி ரிலீஸில் கைவைத்த நீதிமன்றம்..கலக்கத்தில் படக்குழு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share