×
 

ஆயுள் தண்டனை பத்தாது.. அந்தரங்க உறுப்பையே அறுக்கணும்..! பொள்ளாச்சி தீர்ப்புக்கு நடிகை வரலட்சுமி பதில்..!

பொள்ளாச்சி கூட்டு பாலியல் செய்தவர்களின் அந்த உறுப்பை அறுக்க வேண்டும் என நடிகை வரலட்சுமி காட்டமாக பேசியுள்ளார்.

தமிழ் திரை உலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து இருப்பார். முக்கியமாக லண்டனை தளமாகக் கொண்ட ஒரு நடனக் கலைஞராக நடிகர் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

எடின் பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த வரலட்சுமி, நடிகையாக மாறுவதற்கு முன்பு மும்பையில் உள்ள "அனுபம் கெரின்" என்ற  நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். இதனை அடுத்து போடா போடி திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது.  இதனை அடுத்து சுந்தர் சியின் மசாலா படமான "மத கஜ ராஜா"வில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி பணியாற்றினார்,

இதையும் படிங்க: ஓடிடியில் வெளிவரும் நடிகை வரலட்சுமியின் திரில்லர் திரைப்படம்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக அந்தப் படம் அப்பொழுது வெளியிடப்படாமல் இத்தனை வருடம் கழித்து, தற்பொழுது வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. இதனிடையில், நடிகர் சுதீப்புடன் கன்னடப் படமான "மாணிக்யா" படத்திலும்  பாலாவின் "தாரை தப்பட்டை"  படத்திலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த வரலட்சுமி தற்பொழுது "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். 

இப்படி இருக்க தற்பொழுது, அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கி உள்ள 'தி வெர்டிக்ட்' படத்தில் வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மே 30ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் முழுவதும் அமெரிக்காவில் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய வரலட்சுமி, "முதலில் என்னை ஹாலிவுட் திரைபடத்தில் நடிக்க வைத்து உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் கிருஷ்ணா சங்கருக்கு மிகவும் நன்றி. இந்த படத்தில் நான் பேசிய ஆங்கிலம் சற்று வித்தியாசமாக இருந்தது படம் முழுவதும் என்னை மெதுவாக பேச வைத்து விட்டார் இயக்குனர். நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது" என்று கூறினார்.

இதனை தொடர்ந்து, "பொள்ளாச்சி கூட்டு பாலியல் தீர்ப்பு குறித்து பேசிய வரலட்சுமி, வெளிநாடுகளில் சாதாரணமாக குற்றம் செய்தாலே கை மற்றும் கால்களை எடுத்து விடுவார்கள். அதனால் தான் அங்கு குற்றம் செய்ய மக்கள் பயப்படுகின்றனர். அதே போல் இங்கும் சட்டம் கடுமையாக்கப்படனும். இப்படி பட்ட பாலியல் குற்றம் செய்ப்பவர்களின் அந்த உறுப்பை அறுத்தெறிய வேண்டும். பின்பு இந்த உலகில் அவர்களை உயிருடன் நடமாட விட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் செய்த தவறுகளை உணர்வார்கள்" என கூறினார்.


 

இதையும் படிங்க: ஓடிடியில் வெளிவரும் நடிகை வரலட்சுமியின் திரில்லர் திரைப்படம்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share