எனக்கு திருமணம் செய்ய ஆசை.. ஆனால் மணமகன் தான் இல்லை - ரைசா வில்சன் ஆவேசம்..!
நடிகை ரைசா வில்சன் தனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று அப்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்த இவர், குறுகிய காலத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில் இவர் வழங்கிய ஒரு நேர்காணலில், தனது சினிமா பயணம், காதல் வாழ்க்கை, விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்தும் அவர் மிக நெகிழ்ச்சிகரமாகவும், நேர்மையாகவும் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் முதலில் ஒரு மாடல். அதன் பின் தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமா என்பது ஒரு மாறுபட்ட உலகம். இந்தத் துறைக்கு வந்தபோது எனக்கு பெரும் பதட்டம் இருந்தது. ஆனால் இப்போது அந்த பதட்டம் இல்லை. காரணம் அனுபவம். ஒவ்வொரு ஆண்டும் கடக்கையில், அதன் பிறகு வரும் அனுபவங்கள் எனக்கு பல விஷயங்களை கற்றுத்தந்துள்ளன, இந்த சினிமா பயணத்தில் வெற்றிகளும், தோல்விகளும் இரண்டுமே கிடைத்திருக்கின்றன. இரண்டும் எனக்கு அனுபவங்களை சேர்த்துள்ளன. இப்போது நான் விமர்சனங்களை எதிர்கொள்வதில் பயப்படுவதில்லை. தைரியம் வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் இது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அதையும் தாண்டி, இன்று ஒரு சுதந்திரமான இடத்தில் நின்றிருக்கிறேன். மேலும் 'காதல்', 'லிவிங்' என என்னைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தன. பிகினி அணிவதை பற்றியும் விமர்சனம் எழுந்தது. ஆனால் எனக்கு தெரிந்து விமர்சனங்களை தடுக்கவே முடியாது. நமக்கு முக்கியமான விஷயம், நாம் யாராக இருக்கிறோம் என்பதை உணர்வது. நம் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டுமென்பது நம் விருப்பம். படிக்கும் காலத்தில் காதலிக்க விருப்பமில்லை. அப்போது எனக்கு ‘நான் மட்டும்’ தான் முக்கியம். நான் உண்டு, படிப்பு உண்டு என்ற முறையில் இருந்தேன்.
யாரிடமும் காதல் இல்லை, ஆனால் இப்போது, நான் உண்மையான காதலை எதிர்பார்க்கிறேன். ஆனால் யாரும் உண்மையாக காதலிக்க வருவதில்லை. இதுவரை எனக்கு யாரும் ‘செட்’ ஆகவில்லை.. எனக்கு வரப்போகும் நபர் பொறுமை மிக்கவராக, மனிதநேயம் கொண்டவராக, குடும்பத்தைக் காப்பாற்றக்கூடியவராக, அறிவாளியாக இருக்க வேண்டும். கவர்ச்சி அவசியம் என சொல்லமாட்டேன். கவர்ச்சி என்பது ஒருவரது உடல் தோற்றத்துடன் மட்டுமல்ல, அவர்களின் சிந்தனையுடனும் தொடர்புடையது. எனவே அந்தப் பார்வையில்தான் நான் நபரை மதிப்பீன். யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். அது அவரவர் விருப்பம். என்னைப் பொறுத்தவரையில், கதைக்கேற்ப ஏதேனும் செய்ய வேண்டி வந்தால், அதைத் தவிர்க்க மாட்டேன்” என்கிறார் ரைசா. நாம் ஏற்கும் கதாபாத்திரங்கள், அந்தக் கதையின் தேவையைச் சுற்றி அமைய வேண்டும். அது உண்மையான சினிமா.
இதையும் படிங்க: ரஜினியை திடீரென சந்தித்த நடிகை சிம்ரன்..! 'காலத்தால் அழியாதவை' என புகழாரம்..!
அந்த தேவை ஏற்படும்போது, வரம்புகள் இல்லாமல் கலைக்காக உயிரூட்டுவது நடிகையின் கடமையாகும். அதற்காக யாரையும் விமர்சிக்க முடியாது” என்றார். இன்று சினிமா நட்சத்திரங்களுக்காக சமூக வலைதளங்கள் ஒரு முக்கிய களமாக மாறிவிட்டன. அந்த தளத்தில் ரைசா மிகச்சுறுசுறுப்பாக இருக்கிறார். அவ்வப்போது தனது பயணங்களை, யோகா பயிற்சிகளை, உடற்பயிற்சி வீடியோக்களை, படப்பிடிப்பு இடங்களிலிருந்து உள்ள வீடியோ கிளிப்புகளைப் பகிர்கிறார். விமர்சனங்கள் வரும் போது கூட, அவருடைய பதில்கள் மிக நேர்மையானவை. இது தான் அவரை ரசிகர்கள் மத்தியில் தனித்த இடத்தில் நிறுத்துகிறது. ஆகவே ரைசா வில்சன் ஒரு தனித்துவமான குரலுடனும், அனுபவங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான மனநிலையுடனும் தனது வாழ்க்கையை, கரியரை, எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்திருக்கிறார்.
அவரது பேட்டியில் வெளிப்படும் தைரியம், திறந்த மனம் மற்றும் நேர்மை, இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு உற்சாகத்தைத் தரக்கூடியது. வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனக்கேற்ப வாழ்ந்தவர், இப்போது ஒரு உண்மையான உறவையும், சினிமாவில் பரந்த வாய்ப்புகளையும் எதிர்நோக்குகிறார்.
இதையும் படிங்க: லீவுக்காக பாஸுடன் படுக்கையை பகிர்ந்த நடிகை..! ஓபனாக பேசியதால் பரபரப்பு..!