ராஜமௌலியுடன் கைகோர்க்கும் புஷ்பா..! திடீர் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
பிரபல இயக்குநர் ராஜமௌலியுடன் ஹிட் நடிகர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பெயர் பெற்றவர் எஸ்.எஸ். ராஜமவுலி. பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் மூலம் இந்திய திரைப்படங்களை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றவர் தற்போது தன் அடுத்த முயற்சியில் முழுமையாக மூழ்கியுள்ளார். அவரது அடுத்த திரைப்படமான “SSMB 29” அதாவது “Super Star Mahesh Babu – 29th film” – தற்போது இந்திய திரையுலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்க ராஜமவுலி மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகியோர் இணைவது பல ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்று. இதுவரை இருவரும் ஒரே படத்தில் இணைந்ததில்லை என்பதால், இந்த கூட்டணி ஒரு “ட்ரீம் ப்ராஜெக்ட்” ஆகக் கருதப்படுகிறது. இப்படியாக “SSMB 29” திரைப்படத்துக்காக மகேஷ்பாபு சுமார் 2.5 ஆண்டுகள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக உள்ளது. இந்த அளவுக்கு நீண்ட நேர ஒதுக்கீடு என்பது, இந்தப் படத்தின் விலையை உணர்த்தும் அளவுக்கு பெரியது. படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் 2023 இறுதியில் தொடங்கிய நிலையில், தற்போது படத்தின் திரைக்கதை முடிவடைந்துள்ளதாகவும், 2025 தொடக்கத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட வட்டாரங்களின் தகவலின்படி, “SSMB 29” காசியின் வரலாற்றையும், அங்கு நடைபெற்ற பண்டைய நாகரிகங்களின் மறைக்கப்பட்ட மர்மங்களையும் மையமாகக் கொண்ட அவென்ச்சர்–த்ரில்லர் வகை படமாக உருவாகிறது.
மேலும் ராஜமவுலி எப்போதும் தனது படங்களில் இந்திய பாரம்பரியத்தையும், புராணக் கதைகளையும் நவீன கதைகளுடன் இணைப்பதில் வல்லவர். அதே போல், இந்தப் படத்திலும் காசியின் ஆன்மீக பின்புலத்தையும், இந்திய நாகரிகத்தின் ஆழத்தையும் வித்தியாசமான கதை சொல்லும் பாணியில் வெளிப்படுத்த உள்ளார். சில வட்டாரங்கள் கூறுவதன்படி, படத்தின் கதாநாயகன் ஒரு ஆராய்ச்சியாளர் அல்லது எக்ஸ்பெடிஷன் லீடராக காசி நகரின் மர்மங்களை தேடும் பாத்திரத்தில் வருகிறார். இந்தப் படம் சுமார் ரூ.450 கோடி செலவில் உருவாகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ராஜமவுலியின் படங்களில் பாகுபலி தொடருக்குப் பின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் ஆகும். தயாரிப்பு பொறுப்பை கே.எல்.நாராயணா தலைமையிலான துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும் நெட்பிளிக்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ஆகியவை இணைந்து சர்வதேச விநியோக உரிமைகளை பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தீபிகா படுகோனேவுக்கும், திரிப்தி திம்ரிக்கும் இடையே கடும் மோதல்..! விளக்கம் கொடுத்து எஸ்கேப் ஆன நடிகை..!
படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும், முதல் பாகம் 2027 ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக “SSMB 29” திரைப்படத்தில் ஹாலிவுட் தரத்துக்கு இணையான நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அதில் முக்கியமாக, பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவர், ஒரு சர்வதேச விஞ்ஞானியாகவும், மகேஷ்பாபுவின் கதாபாத்திரத்துடன் இணைந்து செயல்படும் நாயகியாகவும் வருகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, மலையாள சூப்பர் ஸ்டார் பிரித்விராஜ் சுகுமாரன் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ராஜமவுலி ஒவ்வொரு படத்திலும் வில்லனை வலிமையான கதாபாத்திரமாக எழுதுவார் என்பது தெரிந்ததே. இதனால், மகேஷ்பாபு–பிரித்விராஜ் மோதல் ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே “SSMB 29” படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, ராஜமவுலி தனது அடுத்த திட்டத்திற்கான திட்டமிடலை தொடங்கி வைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, “SSMB 29” முடிந்தவுடன் அவர் அல்லு அர்ஜுன் உடன் இணையும் திட்டத்தை உறுதி செய்துள்ளார். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், அல்லு அர்ஜுன் கதையின் கருவை மிகவும் விரும்பியதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போது “புஷ்பா 2” படமுடித்துள்ள நிலையில், இனி ராஜமவுலி இயக்கத்தில் நடிப்பார் என வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கூட்டணி உறுதியானால், அது தென்னிந்திய சினிமா மட்டுமல்ல, பான்-இந்தியா அளவிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என ரசிகர்கள் கூறுகின்றனர். அல்லு அர்ஜுன் கடந்த சில ஆண்டுகளில் “புஷ்பா” மூலம் இந்திய அளவிலான புகழைப் பெற்றுள்ளார். அவரது நடிப்புத்திறனும், உடல் மொழியும், ரசிகர்களை ஈர்க்கும் தன்மையும் ராஜமவுலியின் வலிமையான திரைக்கதையுடன் இணைந்தால், அது ஒரு சூப்பர் காம்பினேஷன் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கூட்டணிக்கான கதை அட்சயபாத்திரம் என்ற புராணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ உறுதி இன்னும் வெளிவரவில்லை.. ராஜமவுலி தற்போது உலக திரைப்பட வரலாற்றிலும் இந்தியாவின் பெருமையை உயர்த்திய இயக்குனர்களில் ஒருவர். RRR படத்திற்காக அவர் ஆஸ்கர் விருது மேடையில் இந்தியக் கொடியை ஏந்திய தருணம் இன்னும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அவர் ஒவ்வொரு படத்திலும் கதை சொல்லும் விதம், தொழில்நுட்ப நுணுக்கம், காட்சியமைப்பு ஆகிய அனைத்தும் இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்துள்ளது. “SSMB 29” மற்றும் அல்லு அர்ஜுன் படங்கள் ஆகிய இரண்டும் இணைந்தால், அது அவரது கேரியரில் இரண்டு மிகப் பெரிய மைல்கற்களாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆகவே “SSMB 29” திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் கூட, அதன் மீது உருவாகியிருக்கும் ஆர்வம், இந்திய சினிமாவின் அளவை வெளிப்படுத்துகிறது. ராஜமவுலி – மகேஷ்பாபு கூட்டணி காசியின் வரலாற்றை வெளிச்சமிடப் போகும் நிலையில், அதன் பின் அவர் அல்லு அர்ஜுனுடன் இணைவது ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எல்லாமே சூப்பரா இருந்தா என்ன செய்வது..! கிடைத்துவிட்டது “பைசன்” படத்தின் 4வது பாடல் குறித்த அப்டேட்..!