×
 

துபாயில் நடிகர் விஜய்சேதுபதி செய்த தில்லாலங்கடி வேலை...! அப்பட்டமாக வெளிவந்த உண்மை..!

நடிகர் விஜய்சேதுபதி துபாயில் செய்த தில்லாலங்கடி வேலை குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகராக மாறி, கதாநாயகனாக அவதாரம் எடுத்து  தற்பொழுது வில்லனாக கலக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படத்தில்  வில்லன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மாறி இருப்பார். அதேபோல் நடிகர் விஜயின்  'மாஸ்டர்' திரைப்படத்தில் 'பவானி' என்கின்ற கேரக்டரில் மோசமான வில்லனாகவே மாறி அனைவரையும்  கதி கலங்க வைத்தார். தமிழகத்தை கடந்து பான் இந்தியா ஸ்டார் ஆக மாறி, இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தில் 'காளி' என்கின்ற கேரக்டரில் மாஸ் வில்லனாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி. 

இப்படி நடிப்பில் கலக்கல் மன்னனாக இருக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையத்தில் பிறந்தவர், இவர் தனது வாழ்க்கையில் கணக்காளராக வேலை செய்ய தொடங்கினார். அந்த வேலை அவருக்கு பிடிக்காமல் போக, ஒருவர் ஸ்கிரீனில் அவருடைய முகம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல, கூத்து பட்டறைக்கு சென்று  கணக்காளராக பணிபுரிந்து பல திரை பிரபலங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு சினிமா துறையில் மேலே வந்தவர். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு "தென்மேற்கு பருவக்காற்று" என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து 2012ல் 'பீட்சா' என்கின்ற படத்தில் தனது முழு திறமையும் காண்பித்து பாதி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்பு இவரது நடிப்பில் வெளியான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற படத்தில் நடித்த விஜய் சேதுபதியை மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். 

இதையும் படிங்க: என்ன ஆரம்பிக்கலாமா.. பிளாஸ்ட் கன்பார்ம்..! வந்தது விஜய்சேதுபதியின் "Ace" படத்தின் முதல் விமர்சனம்..!

இப்படிப்பட்ட விஜய் சேதுபதி சமீபகாலமாக பிக்பாஸில் நடுவராக தொகுப்பாளராக கலக்கி வருகிறார். இவரது தக் ரிப்லேவால் பலரது மனதையும் கொள்ளை கொண்டார் சேதுபதி. இப்படிப்பட்ட விஜய் சேதுபதி இதுவரை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வன்மம், ரம்மி, பண்ணை யாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், நானும் ரவுடிதான், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், றெக்க, ஆண்டவன் கட்டளை, தர்மதுரை, காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி, கதாநாயகன், கவன், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன், 96, மேற்கு தொடர்ச்சி மலை,

இமைக்கா நொடிகள், ஜூங்கா, சீதக்காதி, செக்கச் சிவந்த வானம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சிந்துபாத், சாயிரா நரசிம்மரெட்டி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட, சங்கத் தமிழன், தீர, ஓ மை கடவுளே, கணவன் பெயர் ரண சிங்கம், துக்ளக் தர்பார், குட்டி ஸ்டோரி, அனபெல் சேதுபதி, நவரசா, மாஸ்டர், முகில், லாபம், மாமனிதன், டிஎஸ்பி, காத்து வாக்குல ரெண்டு காதல், கடைசி விவசாயி, விக்ரம், விடுதலை, ஜவான், யாதும் ஊரே யாவரும் கேளிர், மைக்கேல், விடுதலை டு, மேரி கிறிஸ்மஸ், மகாராஜா, வசந்தகுமாரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இப்படி இருக்க, இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில், நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பப்லு, கேஜிஎஃப் அவினாஷ், திவ்யா பிள்ளை, ஆகியோருடன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் Ace. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஜய் சேதுபதி தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி, "துபாயில் நான் வேலை பார்த்தது அனைவருக்கும் தெரியும், அப்படி இருக்கும் பொழுது, பார்ட் டைம்ல வேலை செய்து இருக்கேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்னொரு வேலை செய்வதற்கு அங்கு அனுமதி என்பதே கிடையாது. ஆனால் ஃப்ரீ விளம்பர பேப்பர் போடுவதற்கு மட்டும் அங்கு அனுமதியுண்டு. 

எதற்க்காக அந்த வேலைக்கு சென்றேன் என்றால் எனக்கு அங்கு சம்பளம் பத்தவில்லை என்ற காரணத்தினால் வேறொரு வேலை தேடி கொண்டிருந்த பொழுது தான் துபாய் ஷேக் ரோட்ல பேப்பர் போடுற வேலை எனக்கு கிடைத்தது. இதுவரை கிட்டத்தட்ட 3000 பேப்பர்களுக்கும் மேலாக அங்கு போட்டுருக்கேன். அங்கு என்னுடைய சம்பளம் என பார்த்தால் 1000 திராம், இதுகூட பேப்பர் போட 500 திராம் என மொத்தமாக 1500 திராம் வாங்கினேன். இதெல்லாம் ஒருநாளும் கஷ்டமாக நினைக்கவில்லை. 500 திராம் அதிகமாக சம்பாரிப்பதை நினைத்தே சந்தோஷப்பட்டு மீண்டும் அந்த வேலையை செய்தேன். வேலை செய்வதை கஷ்டம் என பார்த்தால் முன்னுக்கு வர முடியாது" என கூறியுள்ளார் விஜய் சேதுபதி. 

 

இதையும் படிங்க: தக் லைஃப் பட முத்தக்காட்சி சர்ச்சை..! அதிரடி பதிலால் ஆஃப் செய்த நடிகை அபிராமி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share