×
 

மனுஷன் புடிச்சிட்டாப்புல.. சூப்பர் ஸ்டார் ரஜினியையே பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வைத்த பிரபலம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பிறந்த நாள் வாழ்த்தை பெற்றுள்ளார் திரைப் பிரபலம் ஒருவர்.

ஒவ்வொரு திரைப்படங்களிலும் கதைகள் இருக்கிறதோ இல்லையோ... சண்டைக் காட்சிகள் இருக்கிறதோ இல்லையோ.. கண்டிப்பாக நடன காட்சிகள் மட்டும் இல்லாமல் இருக்காது.. ஒரு படத்திற்கு தோராயமாக 5 பாடல்களில் இருந்து பத்து பாடல்களை கூட வைத்து வருகின்றனர் இந்திய திரை உலகத்தினர்.

இப்படி இருக்க, திரைத்துறையில் நடன கலைஞர்கள் அதிக பேர் இருந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு இருப்பவர்கள் ஒரு சிலரே.. இப்படிப்பட்ட சூழலில், தமிழ் சினிமாவில் நடன கலைஞர்களில் பிரபலமானவர் என்று கூறப்பட்டால் அவர்தான் கலா மாஸ்டர்... அவரிடமிருந்து உருவான பல கலைஞர்கள் இன்று திரையுலகின் மிகப்பெரிய பிரபல ஜாமவான்களாக மாறி இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் நடன கலைஞரான சாண்டி மாஸ்டர்... இவர் நடன கலைஞராக உருவானதை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் இவருக்கு ஃபேன் பாலவர்ஸ்கள் சற்று அதிகமாகவே மாறியிருக்கின்றனர். 

இதையும் படிங்க: இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக... உலகெங்கும் "கூலி" திரைப்படம்... செம அப்டேட்..!

ஏனெனில் அந்த அளவிற்கு நகைச்சுவை தன்மையை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் சாண்டி மாஸ்டர் தற்பொழுது மக்கள் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சாண்டி இந்திய திரைப்பட உலகில் நடன கலைஞராகவும் தற்பொழுது நடிகராகவும் மாறி இருக்கிறார்... தமிழ் திரையுலகில் நடன ஜாம்பவானான கலா மாஸ்டரிடம் நடன வித்தைகளை கற்றுக் கொண்ட சாண்டி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மாநாடு மயிலாட' நிகழ்ச்சியில் ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றினார். இதன் மூலமாக பிரபலமாக தொடங்கிய சாண்டி, தமிழ் திரையுலக பிரபலமான 'காஜல் பசுபதி' என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு சில்வியா என்பவரை விரும்பி திருமணம் செய்து கொண்டார். இப்படி கலா மாஸ்டர் மூலமாக தொலைக்காட்சியில் தனது நடன வாழ்க்கையை தொடங்கிய சாண்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைப்பட உலகில் நடன ஆசிரியராக இன்று மிகவும் பிரபலமாக மாறி இருக்கிறார். இப்படிப்பட்ட சாண்டி மாஸ்டர் திடீரென ஒரு நாள் இளையதளபதி விஜயின் 'லியோ' திரைப்படத்தில் அட்டகாசமான ரோலில் நடித்திருந்தார். இதனைப் பார்த்த அனைவரும் சாண்டிக்கு இப்படி ஒரு நடிப்புத் திறமையா என அவரை பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது சாண்டி மாஸ்டர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய நிகழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அந்தப் புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ள சாண்டி, அதில் " எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டு எனது பிறந்தநாள் எனது அன்புத் தலைவரின் ஆசியுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது" என மகிழ்ச்சி பொங்க இப்பதிவை பதிவிட்டு இருக்கிறார். 

மேலும் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கின்ற "கூலி" திரைப்படத்தில் சமீபத்தில் வெளியான "சிக்கீடு" பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிக்கிடு பாடல் விஷ்வல் பார்க்க அப்படி இருக்கும்..! இசையமைப்பாளர் அனிரூத் சொன்ன சூப்பர் நியூஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share