டார்கெட் கம்பிளிட் பண்ண நேரம் வந்தாச்சு..! கூலி படம் வசூலை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்.. ஹாப்பியில் படக்குழு..!
கூலி படம் வசூலை பார்த்து படக்குழுவினரும் ரசிகர்களும் திகைத்து போய் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘கூலி’ திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அசுர வெற்றியைக் கண்டுள்ளது. ரஜினிகாந்தின் மீண்டும் ஒரு மாஸ் ரீஎன்ட்ரியாக இந்தப் படம் அமைந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – இசையமைப்பாளர் அனிருத் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி என்பதாலேயே படம் வெளியீட்டிற்கு முன்பே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது, வெளியான சில நாட்களிலேயே இப்படம் ரூ.500 கோடி மைல்கல்லை தாண்டி, தமிழ் சினிமாவின் வரலாற்றில் புதிய ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளது.
இப்படம் ஒரு அதிரடியான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருந்தது. ரஜினியின் வயது மாறிய வலிமை, மாஸ் ஸ்கிரீன் ப்ரெசன்ஸ், அவருக்கு கிடைத்த ஸ்டைலிஷ் கெட்டப்புகள் மற்றும் அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்க செய்தன. மேலும் ‘கூலி’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.151 கோடி வசூல் செய்து, விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. லியோ படம் வெளியான போது, முதல் நாளில் ரூ.148 கோடி வசூலித்தது. தொடர்ந்து மூன்று நாட்களில் ரூ.300 கோடி வசூல் என வேகமான முன்னேற்றம் காணப்பட்ட 'கூலி' திரைப்படம், தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக விரைவாக ரூ.300 கோடியைத் தொட்ட படம் என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன் இதே சாதனையை ‘லியோ’ ஐந்து நாட்களில் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க புதிய தகவலின்படி, தற்போது 'கூலி' திரைப்படம் உலகளாவிய வசூலில் ரூ.500 கோடி வரையைக் கடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், தமிழ் சினிமா வரலாற்றில் ரூ.500 கோடி கிளப்பில் நுழைந்த நான்காவது திரைப்படமாக ரஜினிகாந்தின் ரூ.500 கோடி கிளப்பில் சேரும் மூன்றாவது படம் அதுவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மூன்றாவது ரூ.500 கோடி படம் மூன்று வாரங்களுக்குள் இதனை சாதித்த முதல் தமிழ் படம் என பல கருத்துக்களை சொல்லி கொண்டே செல்லலாம்.
இதற்கு முன் ரூ.500 கோடி கிளப்பில் சேர்ந்த தமிழ் திரைப்படங்கள் என பார்த்தால் சங்கர் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான 'எந்திரன் 2.0', அடுத்ததாக 'ஜெயிலர்', அடுத்து 'லியோ' என இவைகள் தான் பேசப்பட்டது. இப்படிப்பட்ட வரிசையில் தற்பொழுது இணைந்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து உள்ள நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது தான். தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ நாகர்ஜுனா, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர் கான், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி ரசிகர்களிடமும் பிரபலமான நடிகையான ஸ்ருதிஹாசன், சத்யராஜ், மலையாளத்தின் தனிச்சிறப்பான நடிகர் சவுபின் சாஹிர், கன்னட திரை உலகின் மாஸ் ஹீரோ உபேந்திரா என அனைவரும் நடித்துள்ளனர். இந்த அளவுக்கு பெரும் நட்சத்திர பட்டாளம் ஒன்றாக நடித்ததில் படம் பன்முகத் தன்மையை பெற்றது.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை..! சினிமா முதல் அரசியல் வட்டாரம் வரை ஹாப்பி..!
ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஃப்ளேவர் இருக்க, திரைக்கதையில் எந்த குழப்பமும் இல்லாமல் லோகேஷ் அதனை நேர்த்தியாகக் கட்டமைத்திருந்தார். மேலும் படத்திற்கு இசையமைத்த அனிருத், இன்னொரு மெகா ஹிட் இசையை கொடுத்துள்ளார். இப்படியாக ‘கூலி’ திரைப்படம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் பரவலாக வெளியிடப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்ட்ரேலியா, மிடில் ஈஸ்ட் போன்ற நாடுகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மல்டிபிளெக்ஸ்கள் மற்றும் தியேட்டர்கள் ஹவுஸ் புல்லாக தொடர்ந்தன. முக்கியமாக, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ரஜினியின் தனி ரசிகர் மாஸ் காரணமாக மிகப்பெரிய வசூல் கிடைத்திருக்கிறது. ஆகவே ‘கூலி’ திரைப்படம் மூலம் ரஜினி மீண்டும் ஒருமுறை தனது பாக்ஸ் ஆபீஸ் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை நிரூபித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் அவரை முற்றிலும் மாடர்னாக, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் அமைத்தமை, ரசிகர்களை திருப்தி செய்துள்ளது. இது தமிழ் சினிமாவிற்கான பெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. வசூல், விமர்சனம், ரசிகர்களின் எதிர்வினை என மூன்றிலும் சக்கை போடு போட்டுள்ள ‘கூலி’, இப்போது தமிழ்சினிமாவின் பொற்கால சாதனைகளில் ஒன்றாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: அய்யோ.. முதல்ல அவன் என் புருஷனே கிடையாது...! இன்ஸ்டாவில் கதறும் சீரியல் நடிகை..!