×
 

பார்க்கும் பார்வையில் இளசுகளின் மனதை பற்ற வைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

நடிகை ராகுல் ப்ரீத், பார்க்கும் பார்வையில் இளசுகளின் மனதை பற்ற வைக்கும் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கன்னட சினிமாவில் வெளியான கில்லி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 

Keratam என்ற தெலுங்கு படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு, தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இதையும் படிங்க: பிரபாஸின் ’பௌஜி’ படத்தில் 3 பிஎச்கே நடிகை..! சைத்ரா-வின் என்ட்ரியால் குதூகலத்தில் ரசிகர்கள்..!

புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, Boo, அயலான், இந்தியன் 2 என்று தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தார். இப்போது இந்தியன் 3 படத்தில் நடித்து வருகிறார்.

அருண் விஜய், கௌதம் கார்த்திக், கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், சித்தார்த் ஆகியோர் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 

எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், போட்டோஷூட் எடுத்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இப்போது நீல நிற உடையில் சிறகடிக்கும் பட்டபூச்சு போல் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு பின்னரும் இப்படியா? என ரகுல் ப்ரீத் சிங் அழகையும் - கவர்ச்சியையும் வர்ணித்து வருகிறார்கள் நெட்டிசன்கள் 

அவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஹிட் கொடுத்த 'பைசன்'.. ஹைப்பை தூண்டும் துருவ் விக்ரமின் அடுத்த படம்..! இயக்குநர் யார் தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share