×
 

இப்படியும் போட்டோ ஷூட் பண்ணலாமா..! ராஷ்மிகாவின் "நச்" கிளிக்ஸ்..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ரஷ்மிகா மந்தண்ணா கடந்த  2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர்.

பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும்  திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானார். 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த ஷிவானி நாராயணன்!

இதுவரை தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)",

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", 

இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார். 

இதனை அடுத்து, நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான "சாவா" படம் பல கோடிகளை கடந்து வெற்றி படமாக மாறி இருந்தது.

குறிப்பாக மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயி பாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் காதலர் தினம் அன்று வெளியானது.

இதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "சிக்கந்தர்" திரைபடத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் ராஷ்மிகா.

இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என கூறிய நிலையில் படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்தது.

இதையும் படிங்க: பிகினி உடையில்... நீச்சல் குளத்தில் நின்றபடி போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share