உங்கள நான் படம் பாக்க சொன்னனா.. இஷ்டம் இருந்தா பாருங்க..! நடிகை ராஷ்மிகா பேச்சால் பரபரப்பு..!
திடீரென காட்டமாக பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனாவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ரஷ்மிகா மந்தண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழகிக்கப்படும் இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கௌடவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
பார்க்க க்யூட்டாகவும், அழகாவும், புன்னையுடனும் ஜெனிலியாவை போன்ற வெகுளித்தனமான நடவடிக்கைகளையும் பார்த்து கவரப்பட்ட பல இயக்குநர்கள் இப்படத்திற்கு பின்பு ராஷ்மிகாவுக்கு பல படவாய்ப்புகளை கொடுத்தனர். இதனால் கிரிக் பார்ட்டி திரைப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானவர்.
இதையும் படிங்க: இனி ராஷ்மிகாவை கையில் பிடிக்க முடியாது..! மந்தனாவின் திணறடிக்கும் போஸ்டர் வைரல்..!
இதனை அடுத்து கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலித்தார், பின் இவர்களது நிச்சியதார்தம் 2017 ஜூலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமணம் நடக்க இருக்கும் வேளையில் 2018ம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இப்படி இருக்க, இதுவரை, தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)", இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்",
இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார். இந்த நிலையில், தற்பொழுது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் தற்பொழுது உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் வெளியான படம் தான் "அனிமல்". இந்த படத்தில் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் இதுவரை ரூ.900 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும், இந்த படத்தை பார்த்த பலரும் தயவு செய்து 'அனிமல்' படத்தை யாரும் பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏனெனில் இந்த படத்தில் அதிகளவு வன்முறையும், ஆபாசமும் நிறைந்திருக்கிறது என அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனை குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள ராஷ்மிகா மந்தனா, "ஒரு சில படங்களில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களை பாதிக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதெல்லாம் இப்பொழுது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. நானும் தான் நிறைய படங்களை பார்க்கிறேன் அதனால் ஒருபோதும் நான் இன்புளுயன்ஸ் ஆக மாட்டேன். அப்படி உங்களுக்கு தோன்றுகிறதா அப்பொழுது இது போன்ற படங்களை பார்க்காதீர்கள். நான் நடித்த இந்த 'அனிமல்' படத்தை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே. பூமியில் வாழும் எல்லா மனிதர்களுக்குள்ளுமே ஒரு கிரே கேரக்டர் கண்டிப்பாக இருக்கும்.
அப்படிப்பட்ட கேரக்டரை தான் இந்த "அனிமல்" படத்தில் தெளிவாக காண்பித்திருந்தார் இயக்குனர். அப்படி இந்த படம் நன்றாக இல்லை என்றால் எதற்காக இப்படத்தை மக்கள் கொண்டாடி உள்ளார்கள். அதனால் தான் மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூலித்தும் உள்ளது. முதலில் படத்தை படமாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அந்த படங்களில் வரும் கதாபாத்திரத்தோடு அதில் நடிப்பவர்களை இணைத்து ஒருபொழுதும் பார்க்க கூடாது. உண்மையில் படங்களில் நடிக்கும் பொழுது இருக்கும் அதே கேரக்டரில் நிஜ உலகிலும் நாங்கள் இருப்பதில்லை இங்கு வேறு கேரக்டர்" என காட்டமாக கூறியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இதையும் படிங்க: "அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை".. விமான விபத்து குறித்து கண்கலங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..!