மயங்கி கிடந்தேனடி.. என் போதையே..! இளசுகளை கவிதை பாட வைக்கும் கிளாமரில் நடிகை ரவீனா தாஹா..!
நடிகை ரவீனா தாஹா கிளாமரில் அழகிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணைய உலகில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகைகளில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் ரவீனா தாஹா.
சிறு வயதிலேயே நடனத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரவீனா, அதன் பின்னர் நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
நடனம், நடிப்பு, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் இருப்பது என பல தளங்களில் செயல்பட்டு வரும் ரவீனா தாஹா, தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை இணையத்தை கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: 2026-ல எல்லாரும் நல்லா இருக்கணும்-பா அண்ணாமலையாரே..! திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த இளையராஜா..!
ரவீனா தாஹாவின் கலைப்பயணம் முதலில் தொடங்கியது நடனத்திலிருந்து என்பதே குறிப்பிடத்தக்கது.
சிறு வயதிலேயே மேடை நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது நடன திறமையை வெளிப்படுத்திய அவர், பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
அவரது நடனத்தில் இருக்கும் எக்ஸ்பிரஷன், உடல் மொழி மற்றும் மேடை நம்பிக்கை ஆகியவை அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டின.
இதன் காரணமாக, அவர் மீது சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையினரின் கவனம் திரும்பியது. இதனைத் தொடர்ந்து, ரவீனா தாஹாவுக்கு நடிப்பு வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
இதையும் படிங்க: பல போராட்டங்களுக்கு பின் வெளியானது.. விஷாலின் 'மகுடம்' பட புது போஸ்டர்..!