×
 

பாடகியை கரம் பிடித்த ரவிமோகன்..! சக்காளத்தி சண்டையை ஆரம்பித்த ஆர்த்தி..!

பாடகியை கரம்பிடித்து வந்த ரவி மோகனால் டென்ஷனில் உள்ளார் ஆர்த்தி ரவி.

தமிழ் பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தனக்கு கணவனாக இப்படி ஒருவன் வரமாட்டானா என ஏங்கும் அளவிற்கு இருப்பவர் தான் நடிகர் ரவி மோகன். ஜெயம் படத்தில் நடித்ததால் மக்கள் மத்தியில் ஜெயம் ரவி என அன்புடன் அழைக்கப்பட்ட இவர், நிறைய படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருக்கிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் இவரது காமெடி திறமையால் அனைவரையும் தன் வசமாக்கினார். அடுத்து எம்.குமரன் s/o மகாலட்சுமி என்ற படத்தில் பாக்ஸராக வந்து மலையாளியாக வந்த அசினை, ஒய் மலபார் என சொல்லி மலையாள பெண்களை திரும்பி பார்க்க வைத்தார். 

இப்படி, ஜெயம், எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, மழை, தாஸ், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், இதய திருடன், தீபாவளி, வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், கோ, ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியெட், தனி ஒருவன், சகலகலா வல்லவன், பூலோகம், மிருதன், போகன், வனமகன், அடங்க மறு, டிக் டிக் டிக், தும்பா, கோமாளி, பூமி, பொன்னியின் செல்வன் (PS 1), இறைவன், அகிலன், பொன்னியின் செல்வன் 2, சைரன், பிரதர், தக் லைஃப், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: அமெரிக்கா கிளம்பிய பரணி! காதலை சொல்வானா ஷண்முகம்? - அண்ணா சீரியல் அப்டேட்!

இத்தனை படத்தில் நடித்த ரவி மோகன் தன்னிடம் ஒரு ரூபாய் பணம் கூட இல்லை, எனது மனைவி எனக்கு மனைவியாக இல்லாமல் இன்னும் அவரது தாயாருக்கு மகளாகவே உள்ளார் என குற்றம் சாட்டி விவாகரத்திற்கு சென்றுள்ள வேளையில், இருவருக்கும் நீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ரவிமோகன் பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பரவ, அதனை பாடகியும் அப்பொழுது மறுத்தார்.

ஆனால் இப்பொழுது சேம் கலர் ட்ரெடிஷ்னல் உடை அணிந்து ரவி மோகனும்,கெனிஷாவும் ஒன்றாக கைகோர்த்தபடி தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத்திருமண விழாவில் வந்து நிற்க, ஊர் கண்ணே படும் அளவிற்கு திருஷ்டி இவர்கள் இருவர் மீதும் விழ துவங்கியது. இதனை அனைவரும் தனது போனில் போட்டோ எடுத்து ரவி மோகன் காதலி பாடகி தான் என பதிவிட்டு வருகின்றனர். 

இப்படி இருக்க, இதனை பார்த்து டென்ஷானான ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, ஒரு அறிக்கை ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வருடமாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகமே நாங்கள் பிரிய என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டிருக்கும். என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என மீடியாவிடம் கேட்டு கொள்கிறேன். சட்டப்படி, எனக்கும் ரவி மோகனுக்கும் விவாகரத்து ஆகவில்லை.

ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது மகன்களை தவிக்கவிட்டு சென்று உள்ளார். எந்த பண உதவியும் இல்லாமல் நாங்கள் இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டில் இருந்து பேங்க் மூலமாக எங்களை காலி செய்ய வைத்துள்ளார் ரவி " என தெரிவித்து இருக்கிறார்.  

 

இதையும் படிங்க: Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு வந்த புது சிக்கல்; ரேவதிக்கு தெரியவரும் உண்மை?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share