விஷாலுக்கு கிடைத்த பெண் தேவதை..! அழகிய நடிகையை கரம்பிடிக்க போகிறார் ஆக்ஷன் ஹீரோ..!
மறைத்து வைத்த விஷாலின் காதலி இவர் தானா என நெட்டிசன்கள் மகிழ்ச்சியில் கூறிவருகின்றார்.
தமிழ் சினிமாவில் நடிப்பில் கில்லியாகவும் ஆக்ஷனில் கிங் ஆகவும் இருப்பவர் தான் நடிகர் விஷால். இப்படிப்பட்ட நடிகர் விஷால், முன்னணி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான ஜி. கே. ரெட்டி என்பவரின் மகன். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்ததும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரரும் அவரை படத்தில் நடிக்க வைக்க விரும்பினர், அதனால் சினிமா துறையில் கால் வைத்த விஷால் முதலில், நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி சினிமாவின் நுணுக்கங்களை கற்று கொண்டார். அதன் பின், செல்லமே படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்க உடனே நடிப்பிற்கான பயிற்சியை பெற்று அந்த படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட் அடிக்க அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
இதுவரை விஷால் தமிழ் திரையுலகில், செல்லமே, சண்டக்கோழி, சிவப்பதிகாரம், டிஷ்யூம், திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, வெடி, அவன் இவன், சமர், தீயா வேலை செய்யணும் குமாரு, பட்டத்து யானை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஆம்பள, பாயும் புலி, தாக்க தாக்க, கதகளி, மருது, கத்திச்சண்டை, துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டகோழி 2, ஆக்ஷன், அயோக்யா, எனிமி, சக்ரா, லத்தி, வீரமே வாகை சூடும், மார்க் ஆண்டனி, ரத்னம், நாளை நமதே, துப்பறிவாளன் 2, மத கஜ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி நான் தனி ஆளில்ல.. எனக்குன்னு மனைவி வரப் போறாங்க - விஷால் கொடுத்த கல்யாண அப்டேட்..!
இதனை தொடர்ந்து, சமீபத்தில் 'மதகஜராஜா' பட விழாவில் கலந்து கொண்ட விஷால் மேடையில் பேசும்பொழுது கைகள் நடுங்குவதை பார்த்து ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் விஷால், அப்போது திடீரென மேடையிலிருந்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பலரும் விஷால் குடித்து வந்தார், போதை பொருள் பயன்படுத்தியதால் தான் மயங்கி விழுந்தார் என கூறி வந்தனர். இது குறித்து சமீபத்தில் பேசிய விஷால், மது, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் நான் விட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 2 வருடத்திற்கு முன்பே குடிப்பதையும் நிறுத்திவிட்டேன் என கூறி சென்றார்.
இந்த நிலையில், நடிகர் விஷால் சீக்கிரம் கல்யாணம் செய்தி சொல்ல வேண்டும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். அதன்படி, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "நடிகர் சங்கம் கட்டிடத்தின் திறப்பு விழா ஆகஸ்ட் 15ம் நடைபெற இருக்கிறது. அதற்கான வேலையில் மிகவும் தீவிரமாக இறங்கியிருக்கிறார் நடிகர் கார்த்தி. அதற்கு பின், எனது திருமண காரியங்கள் நடக்கும், பெண் பாத்தாச்சு, காதல் கல்யாணம் தான். ஆதலால் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா முடிந்த பின் கண்டிப்பாக பத்திரிக்கையுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்" என்றார்.
இப்படி இருக்க, நடிகர் விஷாலுக்கு வரவிருக்கும் துணைவியார் பற்றிய அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதன் படி பார்த்தால், விஷாலை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த பெண், 'பேராண்மை' படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக தோன்றிய நடிகை சாய் தன்ஷிகா தான். தஞ்சாவூரை சேர்ந்த இவர், பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் இடையில் அழகான காதல் மலர்ந்த வேளையில் தற்பொழுது திருமணம் வரை முடிவாகி உள்ளதாம். இந்த ஸ்வீட் அறிவிப்பு இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ள சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான 'யோகி டா' படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நடிகர் விஷால், தனது திருமண அறிவிப்பை பகிரங்கமாக கொடுப்பார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருவிழாவில் மயங்கி விழ சரக்கு அடித்ததுதான் காரணமா..! நடிகர் விஷால் சொன்ன விளக்கம்..!