என்ன சாபம் விட்டாலும் பலிக்காது..! அம்மா, பொண்ணுக்கு பாடகி கெனிஷா நெத்தியடி பதில்..!
ரவிமோகனின் மாமியார் மற்றும் மகளுக்கும் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் பாடகி கெனிஷா.
குடும்ப வாழ்க்கையில் நன்றாக இருந்த ரவிமோகன் மற்றும் ஆர்த்தி ரவி தம்பதிகளின் வாழ்க்கையில் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் தற்பொழுது விவாகரத்து வாங்க போராடி வருகின்றனர். இப்படி இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத் திருமண விழாவில் பாடகி கெனிஷாவுடன் ஒரே நிற ஆடையில் வந்து இறங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ரவி மோகன். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியது. அடுத்ததாக இந்த செய்தி ஆர்த்தி காதுகளில் விழ, தனது இன்ஸ்ட்டாகிராம் வாயிலாக, இப்பொழுது எங்கள் பிரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என பதிவு செய்திருந்தார்.
ஆர்த்தியின் பதிவை பார்த்து கடுப்பான பாடகி கெனிஷா, "எப்பொழுதுமே ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளைக் கொண்ட பெண்ணிடம் ஈர்க்க மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும்" என பதிவிட்டு தன் காதலை உறுதி செய்தார். அவரை தொடர்ந்து ரவி மோகனும் என்னமோ அனைவரும் ஆர்த்தி ரவி தான் பாதிக்கப்பட்டார் என்று சொல்கிறீர்களே... உண்மையில் இந்த திருமண பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்றால் அது நான் மட்டும்தான். என்னுடைய வீட்டை என்னிடமிருந்து பறித்துக் கொண்டார்கள், என்னுடைய வாகனத்தை பறித்துக் கொண்டார்கள், என்னுடைய பணங்களை பறித்துக் கொண்டார்கள், வெறும் காலோடு என்னை வெளியே அனுப்பும் பொழுது எனக்கு நடந்த அனைத்து கொடுமைகளையும் கூடவே இருந்து பார்த்தவர் பாடகி கெனிஷா மட்டும் தான்" என தெரிவித்தார். மேலும், தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கு அவரது மாமியார் சுஜாதா தான் காரணம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்ன பாத்தா வில்லி மாமியார் மாதிரியா தெரியுது.. லிஸ்ட் போடட்டுமா..? ரவிமோகனை வறுத்தெடுத்த சுஜாதா..!
இதனை பார்த்து சூடான ரவி மோகனின் மாமியார் சுஜாதா, நான்கு பக்கங்களுக்கு தனது மறுப்பை அறிக்கையாக தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு ரவிமோகனை நான் பொறுப்பேற்க வைத்தேன் என சொல்லுகிறாரே அவரை வைத்து தயாரித்த படங்களுக்கான ரூ.100 கோடி கடனுக்கான வட்டியை நான் மட்டும் தான் செலுத்தி வருகிறேன். ரவி மோகன் சொல்லும் அடுக்கடுக்கான பொய்கள் அனைத்தும் அவரை தரம் தாழ்த்தி விடுகிறது. அவரை வைத்து நான் படம் எடுக்க ஒருநாளும் நினைக்கவில்லை அவரது ஆலோசனையின் பேரிலேயேதான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். அவரை நான் கடனாளியாக்கினேன் என்றாலும், ஒரே ஒரு ரூபாய் கடனுக்கு அவரை பொறுப்பேற்க வைத்திருந்தாலும், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் ரவி பார்ப்போம்.
வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என்றழைக்கும் ரவி மோகனை இந்த சூழலிலும் நான் மகனாகவே நினைக்கிறேன். என் மகளும், ரவி மோகனும் இணைந்து வாழ வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். இப்படி அக்கறை காட்டும் என்னை வைத்து சித்திரவதை செய்த மாமியார் என்ற புதிய பட்டத்தை கொடுத்து அந்த வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள்" என அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
இந்த நிலையில், பாடகி கெனிஷா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஆர்த்தி ரவி, சுஜாதா இருவருக்கும் பதிவு ஒன்றை சேர்த்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது, என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது. என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவேன். நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன், தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன்.நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து, என் ஆன்மா பாடுகிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆர்த்தி ரவி பசங்க பிச்சையா எடுக்குறாங்க.. கெனிஷா உள்ளாடை தெரிய போட்டா உனக்கு என்ன? ஆவேசத்தில் சுசித்ரா..!