×
 

2 குழந்தை பெத்துகிட்ட அப்ப தெரியலயா ஆர்த்தி பத்தி.. ரவி மோகனை கிழி கிழினு கிழிச்ச பயில்வான் ரங்கநாதன்..!

2 குழந்தை பெத்துகிட்ட அப்ப தெரியலயா ஆர்த்தி பத்தி என பயில்வான் ரங்கநாதன் காட்டமாக பேசியுள்ளார்.

சமீபத்தில், தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத் திருமண விழாவில் பாடகி கெனிஷாவுடன் ஒரே நிற ஆடையில்  திடீரென வந்து இறங்கி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார் ரவி மோகன். இதனை பார்த்த அனைவரும் ஆர்த்தி ரவி இதற்கு என்ன சொல்லுவாரோ என உற்று நோக்கி கொண்டு இருக்க, அனைவரது கேள்விகளுக்கும் பதில் தரும் வகையில், ஆர்த்தி ரவி, "ஒரு வருடமாக நீங்கள் அனைவரும் என் மீது வைத்த குற்றத்திற்கு நான் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தேன். ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்து உலகமே தெரிந்து கொள்ளட்டும் தவறு யார் மீது உள்ளது" என அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து பாடகி கெனிஷாவை, இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நுழைந்து இப்படி ஒரு நல்ல குடும்பத்தையே பிரித்து விட்டாயே என பலரும் வசைபாடி வர, ஒரு கட்டத்தில் கடுப்பான பாடகி கெனிஷா, ஆர்த்தி ரவிக்கு பதில் ஒன்றை கொடுத்தார். அதில் "எப்பொழுதுமே ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளைக் கொண்ட பெண்ணிடம் ஈர்க்க மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும்" என பதிவிட கெனிஷா ரவிமோகனை காதலிப்பதும் இனி ஆர்த்தியின் வாழ்க்கையில் ரவிமோகன் இல்லை என்பதும் அப்பட்டமாக தெரிந்தது.

இதையும் படிங்க: பாத்ரூம் போற வேகத்தில் ஆர்த்தி ரவியை திட்டிய சுசித்ரா..!

அவரை தொடர்ந்து ரவி மோகனும் என்னமோ அனைவரும் ஆர்த்தி ரவி தான் பாதிக்கப்பட்டார் என்று சொல்கிறீர்களே... உண்மையில் இந்த திருமண பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் என்றால் அது நான் மட்டும்தான். என்னுடைய வீட்டை என்னிடமிருந்து பறித்துக் கொண்டார்கள், என்னுடைய வாகனத்தை பறித்துக் கொண்டார்கள், என்னுடைய பணங்களை பறித்துக் கொண்டார்கள், வெறும் காலோடு என்னை வெளியே அனுப்பும் பொழுது எனக்கு நடந்த அனைத்து கொடுமைகளையும் கூடவே இருந்து பார்த்தவர் பாடகி கெனிஷா மட்டும் தான்" என தெரிவித்தார். மேலும், தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கு அவரது மாமியார் சுஜாதா தான் காரணம் என தெரிவித்தார். 

இதனை பார்த்து சூடான ரவி மோகனின் மாமியார் சுஜாதா, நான்கு பக்கங்களுக்கு தனது மறுப்பை அறிக்கையாக தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு ரவிமோகனை நான் பொறுப்பேற்க வைத்தேன் என சொல்லுகிறாரே அவரை வைத்து தயாரித்த படங்களுக்கான ரூ.100 கோடி கடனுக்கான வட்டியை நான் மட்டும் தான் செலுத்தி வருகிறேன். ரவி மோகன் சொல்லும் அடுக்கடுக்கான பொய்கள் அனைத்தும் அவரை தரம் தாழ்த்தி விடுகிறது.

அவரை வைத்து நான் படம் எடுக்க ஒருநாளும் நினைக்கவில்லை அவரது ஆலோசனையின் பேரிலேயேதான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். அவரை நான் கடனாளியாக்கினேன் என்றாலும், ஒரே ஒரு ரூபாய் கடனுக்கு அவரை பொறுப்பேற்க வைத்திருந்தாலும், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் ரவி பார்ப்போம். வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என்றழைக்கும் ரவி மோகனை இந்த சூழலிலும் நான் மகனாகவே நினைக்கிறேன். என் மகளும், ரவி மோகனும் இணைந்து வாழ வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். இப்படி அக்கறை காட்டும் என்னை வைத்து சித்திரவதை செய்த மாமியார் என்ற புதிய பட்டத்தை கொடுத்து அந்த வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள்" என அறிக்கை வாயிலாக தெரிவித்தார். 

இப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில், இவர்களது குடும்ப பிரச்சனையில் புதியதாக தலையிட்டு இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அதன்படி, " நடிகர் ரவி மோகன் ஒன்றும் சிறு குழந்தை அல்ல... அவருக்கும் ஆர்த்திக்கும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் இப்பொழுது தான் அவருக்கு தெரிகிறதா அவர் சரியில்லை என. திருமணமாகி ஆறு மாதத்தில் இதை சொல்லி இருந்தால் பரவாயில்லையே. ஆர்த்தி ரவியுடன் வாழ விருப்பமே இல்லாமல் வாழ்ந்து வந்ததாக கூறும் ரவி மோகன், விருப்பம் இல்லாமல் தான் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டாரா? என்கின்ற கேள்வி எனக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த மூன்று வருடங்களாகவே ரவி மோகன் நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. அவர் நடித்த மூன்று படத்தையும் அவரது மாமியார் சுஜாதா தான் இயக்கினார். 

அடங்கமறு படத்தைத் தவிர மீதமுள்ள இரண்டு படங்களும் சரியாக ஓடவில்லை. ஆனால் அதற்காக பணத்தை வாரி இறைத்த மாமியாருக்கு அவர் கருணை காட்ட வில்லை, அதற்குண்டான சம்பளத்தை மட்டும் சரியாக வாங்கிக் கொண்டார். மேலும் எந்தப் படத்திலும் என் சம்மதத்துடன் நான் நடிக்கவில்லை என்று ரவி மோகன் சொல்லி இருப்பது அப்பட்டமான பொய் என்று தான் பார்க்க முடிகிறது. ஏனெனில் எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த கதைகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எல்லா முடிவுகளையும் அவர்தான் எடுத்து உள்ளார். சரி.. இதை தான் பொய்யாக கூறி இருக்கிறார் என்று பார்த்தால், தன்னுடைய அனைத்து பணத்தையும் அவர்கள் பறித்து விட்டார்கள் என அறிக்கையில் அப்பட்டமான பொய்யையும் சேர்த்து கூறியிருக்கிறார்.

ஏனெனில் அவர் வெளிநாட்டிலிருந்து இறக்கிய சொகுசு காரில் தான் கெனிஷாவை கோவாவுக்கு டூர் அழைத்துச் சென்று இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கேரவனிலும் கெனிஷாவுடன் ஜாலியாக இருந்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்தால் எந்த மனைவிதான் ஏற்றுக் கொள்வார்கள் சொல்லுங்கள். கணவன் ஒழுக்கமாக இருந்தால் மனைவி எதற்காக சந்தேகப்பட போகிறாள் அவரிடம் ஒழுக்கம் இல்லை. வீட்டில் ஒன்று இருக்க வேண்டும் கேரவனில் ஒன்று இருக்க வேண்டும் என்று நினைத்தால் இப்படித்தான் சிக்கி தவிக்க முடியும். கெனிஷாவுடன் இருந்த ரவி மோகனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் மனைவிக்கு எவ்வளவு வலி கொடுக்கும் என்பதை யோசிக்க மறந்து விட்டார்.

கெனிஷாவுடன் ரவி மோகன் புதுமண தம்பதி போல எல்லா திருமண விழாக்களுக்கும் செல்வது வெளியே சுற்றுவது போன்ற வீடியோக்களை பார்த்துவிட்டு அவருடைய இரண்டு மகன்களும் சாப்பிடாமல் அழுது இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியுமா. அதுமட்டுமல்லாமல் கெனிஷா உடனான அவரது பழக்கம் அவருடைய பிள்ளைகளிடமிருந்து அவரை தனியாக பிரித்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக அவர் பிள்ளைகளுடன் பேசுவதையே தவிர்த்து இருக்கிறார். இதுவரை அம்மா பிள்ளையாக இருந்த ரவி மோகன் இப்பொழுது கெனிஷாவின் பிள்ளையாக மாறி இருக்கிறார்" என பயில்வான் ரங்கநாதன் காட்டமாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: Kenishaa Francise: ஹீரோயின்களை மிஞ்சிய கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த கெனிஷா பிரான்சிஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share