×
 

ரொமான்ஸ் வேண்டுமா.. பண்ணிட்டா போச்சு..! நடிகை மெஹ்ரின் பிர்சாடா ஓபன் டாக்..!

நடிகை மெஹ்ரின் பிர்சாடா படங்களில் ரொமான்ஸ் வேண்டுமானால் செய்ய வேண்டியது தான் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இந்தி, தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்துவரும் பிரபல நடிகை மெஹ்ரின் பிர்சாடா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். இந்த ஆண்டு வெளியீட்டுக்கு எதிர்பார்க்கப்படும் ‘இந்திரா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அவரது ரீ-என்ட்ரி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே மீண்டும் ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்த விரும்பும் மெஹ்ரின், சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் சினிமா, ரசிகர்கள், கதாபாத்திரங்கள் குறித்துப் பேசினார்.

மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் முதன்முதலில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர், 'நோட்டா' திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் தனுஷ்க்கு ஜோடியாக 'பட்டாஸ்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த மூன்று படங்களும் மெஹ்ரினுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளன. இப்படி இருக்க அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் “நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவள்தான். ஆனாலும் தமிழில் எனக்குக் கிடைத்த அன்பு மறக்க முடியாதது. தமிழ் மொழி மட்டும் அல்ல, இங்கேயுள்ள ரசிகர்களின் மனதைப் பற்றியும், அவர்கள் கொண்ட உணர்வுகளைப் பற்றியும் எனக்கு தெரியும்.

தமிழ் சினிமா என்றால் ஒரு தனி அடையாளம்தான்” என்று மெஹ்ரின் கூறுகிறார். குறிப்பாக தமிழ் ரசிகர்கள் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்த மெஹ்ரின், தொடர்ந்து பேசுகையில் "முதன்முதலாக சென்னை வந்தபோது, தமிழ் சினிமாவின் தாக்கம் எனக்கு நன்கு தெரிந்தது. தமிழ் ரசிகர்கள் ஒருவரை விரும்புகிறார்கள் என்றால், அவர்களை வாழ்க்கையே என்று வைத்துக் கொள்வார்கள். ஜெயலலிதா, குஷ்பு போன்ற நடிகைகள், இங்கே அரசியலுக்கும் மேல் சென்று மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்கள். அந்த வரிசையில் நானும் இணைய விரும்புகிறேன்" என்றார்.

மேலும் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்களில், மெஹ்ரின் நடித்த 'ரொமான்ஸ்' காட்சிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்திருந்தன. இதைப் பற்றி அவர் கூறும்போது, "ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதா? வேண்டாமா? என்பதை ஒரு நடிகை தனியாக முடிவு செய்ய முடியாது. அது கதையின் தேவை என்பதைக் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது. கதைக்கு உண்மையாக இருக்க வேண்டிய பொறுப்பு ஒரு நடிகைக்கு இருக்கிறது. எனவே, சிறந்த கதைக்காக, சிறந்த காட்சிகள் தேவைப்பட்டால், அதில் நடிப்பதில் எனக்கு தயக்கமில்லை" என வெளிப்படையாக பேசினார். அவரது இந்தப் பார்வை, சினிமாவில் பெண்கள் எதிர்கொள்கிற மாதிரியான கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியான பதிலாகக் கருதப்படுகிறது. இப்படியாக மெஹ்ரின் தற்போது நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் ‘இந்திரா’. இது ஒரு தீவிர சமூக அரசியல் பின்னணியில் நடைபெறும் படம் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதையைப் பற்றி அவர் பெரிதாக விவரிக்காமல் இருந்தாலும், இது தனக்குப் புதிய முறையிலான நடிப்பு அனுபவத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஜெயிலர் வசூலை வேகமாக நெருங்கும் 'கூலி'..! இதுவரை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..!

மேலும் “இந்திரா’ படம், ஒரு பெண் கேரக்டரின் உள் உணர்வுகள் மற்றும் வெளி போராட்டங்களைச் சொல்வது. இது ஒரு ஹீரோயின் சென்ட்ரிக் படம். சினிமா என்பது ஆண்கள் மையமாக இல்லாமல் பெண்களும் முக்கியமான கதைகளை கொண்டாடும் தளமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு முயற்சி” என்று அவர் தெரிவித்தார். அதோடு மெஹ்ரின் பிர்சாடா தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் படங்களை ஒப்புக்கொண்டு பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான 'விக்ரம் அக்ஷய்', 'ஸங்கரா', மற்றும் 'டில் ஹை பஞ்சாபி' ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தார். அவரது நடிப்பு திறமை மற்றும் அழகும் ஒரே நேரத்தில் பலரும் பாராட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து கடைசியாக அவர் பேசுகையில், "தமிழ் சினிமா என்னை வளர்த்தது. இப்போது மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன். உங்கள் அன்பும், உற்சாகமும் எனக்கு முன்னே செல்வதற்கான பெரும் ஊக்கம்தான். எனது படம் வெளிவரும் போது, அதைக் கடந்து ரசிக்க உங்கள் ஆதரவை நாடுகிறேன்" என மெஹ்ரின் நெகிழ்ச்சியுடன் கூறினார். ஆகேவ நடிகை மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் மீண்டும் ஒரு புதிய முயற்சியுடன் திரும்பி வருகிறார்.

தமிழ் ரசிகர்களின் அன்பும், அவர்களின் மாறாத நம்பிக்கையும், அவரைப் போன்ற நடிகைகளுக்கு திரையில் நீடித்த பயணத்தை உருவாக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ‘இந்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, மெஹ்ரின் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை தொடக்கிறார் என்பதில் சந்தேகமுமில்லை.

இதையும் படிங்க: யூடியூப் விமர்சகர்களை பைத்தியம் என்ற இயக்குநர் பேரரசு..! ஒரு நிமிடத்தில் ஆடிப்போன அரங்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share