×
 

அம்பி-க்குள் அழகான ரெமோ.. நடிகர் ரெடின் கிங்ஸ்லி குறித்து மனைவி சங்கீதா உருக்கமான பேட்டி..!

தனது கணவரான ரெடின் கிங்ஸ்லியை குறித்து அவரது மனைவி சங்கீதா உருக்கமாக பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனக்கே பாணியில் சிரிப்பை பரிமாறி, வித்தியாசமான சீரியஸ் முகபாவனையுடன் நகைச்சுவையை வெளிப்படுத்தி இன்று  பிரபலமடைந்து இருப்பவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி . இவர் டாக்டர், லவ் டுடே, லிங்குசாமி, லெட்டர்பாக்ஸ் என பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரின் வசன டெலிவரி, டைமிங், மீம்ஸ் கலாச்சாரத்தில் வைரல் ஆகும் அவரது வசனங்கள் என அனைத்தையும் ரசிக்கும் கூட்டம் அவருக்கு பெருகியுள்ளது. இன்று பலருக்கும் நகைச்சுவையை ஏற்படுத்தும் தோழனாக இருக்கிற ரெடின், கடந்த ஆண்டு நடிகை சங்கீதாவை காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

சாதாரணமாகக் காதல் விவாகங்கள் திரையுலகில் சிக்கல்களை உருவாக்கும் சூழலில், இவர்கள் இருவரும் எடுத்த இந்த நேர்மையான முடிவும், அமைதியான திருமணவிழாவும் பலரது பாராட்டையும் பெற்றது. திருமணத்திற்கு பிறகு சங்கீதா, சின்னத்திரை தொடர்களில் இருந்து விலகியதை பார்த்த ரசிகர்கள், “ முழுமையாக சீரியலில் இருந்து விலகிவிட்டாரா அல்லது காம்பேக் கொடுப்பாரா?” என எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அதற்கு பதில் கிடைக்கும் முன்,  சமீபத்தில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பிறப்பு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, ரசிகர்கள், ரசிகையர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை மழைபோல் கொட்டினார்கள். தங்கள் மகிழ்ச்சியை எளிமையாக பகிர்ந்த இந்த ஜோடி, மீண்டும் பலரது கவனத்தையும் பெற்றனர். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு மகளிர் சார்ந்த நிகழ்த்சியில் கலந்து கொண்ட நடிகை சங்கீதா பேசுகையில், தன் கணவர் ரெடின் குறித்து உணர்ச்சி மயமாகப் பேசியுள்ளார்.

அதன்படி அவர் பேசுகையில், " நாங்கள் திருமணம் செய்த பிறகு, அவர் என்னிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்.. அப்படி ஒரு பழக்கம் எங்களுக்குள் இல்லை. எதையும் டிஸ்கஸ் பண்ணாம அவர் எதுவும் செய்ய மாட்டார். அவர் ஏதாவது விஷயத்தில் முடிவெடுக்க வேண்டி இருந்தால் கூட, நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேசிப் ஒரு புரிதலுக்கு வந்த பின்னரே அந்த முடிவை  எடுப்போம். அது வீட்டுப் பொருட்கள் வாங்குவது, வேலைகள், வெளியே செல்வது, சினிமா சம்பந்தமான முடிவுகள் என எந்த விஷயமாக இருந்தாலும் கூட எல்லா விஷயத்தில் என்னுடைய விருப்பத்தையும் கேட்டுத்தான் செய்வார்.

இதையும் படிங்க: இரவில் கேட்ட அலறல் சத்தம்...கன்னட சின்னத்திரை நடிகை ஸ்ருதிக்கு கத்திக்குத்து..! கணவன் வெறிச்செயல்..!

இது தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்," என தனது கணவரை குறித்து புகழ்ந்து தள்ளினார். சங்கீதாவின் இந்த பேச்சு, சினிமா துறையில் வேலை செய்யும் ஒரு ஜோடிகளுக்கு எப்படி அனுசரித்து வாழ வேண்டும் என்பதற்கு ஒரு நேரடி எடுத்துக்காட்டாக இருக்கிறது. மேலும், அதே பேட்டியில் சங்கீதா தாயாகிய பின் சந்திக்கும் மாற்றங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். அதன்படி, " ஒரு குழந்தை நம் வாழ்க்கையில் வந்ததும், நம் சிந்தனையும், நோக்கும், வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிடுகிறது. நம்மிடம் எதிலும் நிதானம் மற்றும் பொறுமை வர ஆரம்பிக்கிறது. ரெடினும் நானும் அந்த மாற்றத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

சங்கீதாவின் இந்த உரையாடல் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கருப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை சிவாங்கி..! இடையழகில் கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share