தாவணி பாவாடையில் குடும்ப பெண்ணாக மாறிய நடிகை ரெஜினா கசன்ரா..!
நடிகை ரெஜினா கசன்ரா தாவணி பாவாடையில் குடும்ப பெண்ணாக மாறிய அழகிய புகைப்படங்கள் இதோ.
இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துத் தன்னை முன்னனி நடிகையாக நிரூபித்து உள்ளார்.
இதையும் படிங்க: நாளை ஒரே நாளில் 'ஒன்பது' படங்கள் ரிலீஸ்..! தியேட்டரை ஹவுஸ் புல் ஆக்க போவது எது..?
ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, தனது நடிப்பு திறமையை பல பரிமாணங்களில் காட்டி மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்து வருகிறார்.
குறிப்பாக ராக்கெட் பாய்ஸ், அஜீப் தாஸ்தான்ஸ் போன்ற பிரபல வெப் சீரிஸ்கள் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சகஜமான, உணர்வுமிக்க நடிப்பால் மக்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றுள்ள ரெஜினா,
தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கரின் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
மதுர் பந்தார்க்கர், பெண்களை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களைத் தழுவிய கதைகள், சமூகத்தில் அடிக்கடி பேசப்படாத சமூக அர்த்தமுள்ள படைப்புகள் முதலானவையை பதிவு செய்வதில் முன்னிலை வகிக்கும் இயக்குநராக பார்க்கப்படுகிறார்.
தற்போது இவர் இயக்கும் புதிய திரைப்படம் ‘The Wives’, இது பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகள்,
இப்படத்தின் தலைப்பு தான் பல சிந்தனைகளை தூண்டும் வகையில் இருக்கிறது.
இதையும் படிங்க: 'கூலி' பட ‘யு/ஏ’ சான்றிதழ் குறித்த வழக்கு..! அதிரடி காட்டிய நீதிமன்றம்..!