×
 

பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'தி வைவ்ஸ்'..! அதிரடியான ரோலில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!

பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'தி வைவ்ஸ்' திரைப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார்.

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவர்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துத் தன்னை முன்னனி நடிகையாக நிரூபித்து உள்ளார். ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, தனது நடிப்பு திறமையை பல பரிமாணங்களில் காட்டி மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்து வருகிறார். குறிப்பாக ராக்கெட் பாய்ஸ், அஜீப் தாஸ்தான்ஸ் போன்ற பிரபல வெப் சீரிஸ்கள் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சகஜமான, உணர்வுமிக்க நடிப்பால் மக்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றுள்ள ரெஜினா,

தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கரின் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். மதுர் பந்தார்க்கர், பெண்களை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களைத் தழுவிய கதைகள், சமூகத்தில் அடிக்கடி பேசப்படாத சமூக அர்த்தமுள்ள படைப்புகள் முதலானவையை பதிவு செய்வதில் முன்னிலை வகிக்கும் இயக்குநராக பார்க்கப்படுகிறார். தற்போது இவர் இயக்கும் புதிய திரைப்படம் ‘The Wives’, இது பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகள், உறவுகளின் பலன்கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவர்கள் மேற்கொள்ளும் முடிவுகள் என அனைத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் தலைப்பு தான் பல சிந்தனைகளை தூண்டும் வகையில் இருக்கிறது.

இந்தக் கதையில், ரெஜினா கசாண்ட்ரா ஒரு முக்கியமான கதாநாயகியாக நடிக்கிறார். அவர் நடிக்கும் வேடம், சிக்கலான உளவியல் மற்றும் வாழ்க்கை உணர்வுகளால் நிரம்பிய கதாபாத்திரமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில், இந்த பட வாய்ப்பு ரெஜினாவுக்குப் பெரிய முன்னேற்றமாகக் கொடுக்கப்போகிறது. ஏனெனில், இது போல உணர்ச்சி நிறைந்த, சவாலான கதாபாத்திரங்களை பதிவு செய்யும் இயக்குநர் ஒருவருடன் பணியாற்றுவது அவரது சினிமா கெரியரின் அடுத்தகட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் மதுர் பந்தார்க்கர் போன்ற சிந்தனை கொண்ட இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவதால், ரெஜினாவுக்கு இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படிங்க: ரன்வீர் சிங், பாபி தியோலுடன் நடிக்கும் ரைசிங் ஸ்டார் ஸ்ரீலீலா..! பாலிவுட்டில் அதிரடி என்ட்ரி.. குஷியில் ரசிகர்கள்..!

ரெஜினா இதுவரை நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களுக்குள் நுழையும் விதம், உணர்ச்சிகளை வெளிக்கொணரும் அவரது இயல்பு, கண்டிப்பாக இந்த படத்தில் அவரை வேறு விதமாக காண்பிக்கும். மேலும், ‘தி வைவ்ஸ்’ படம் பெண்களின் உறவுகளில் மறைக்கப்பட்ட உணர்வுகளையும், அவர்களுக்குள் உள்ள மன நிலைகளையும் வெளிப்படுத்தும் படமாக உருவாக இருக்கிறது. இந்த படம் பெண்களின் பார்வையில் வாழ்க்கையை பார்ப்பதற்கான ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் ஹிந்தியில் தயாராக இருக்கிறது. ஆனால் அதன் விரிவான கருத்து மற்றும் பன்முக கதைக்களம் காரணமாக, இது பான் இந்தியா ரிலீஸ் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எனவே ‘தி வைவ்ஸ்’ படம் என்பது ரெஜினாவுக்கு மட்டும் அல்ல, இந்திய சினிமாவுக்கும் ஒரு முக்கியமான படமாக அமைந்தால், பெண்களின் மனதையும், வாழ்க்கையையும் உணர்ச்சி மிகுந்த பிம்பங்களால் கூறும் ஒரு சினிமா பேச்சாக உருவாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இதையும் படிங்க: லீவு கொடுக்க மாட்டீங்கிறாங்க.. குடும்பத்தை பார்த்து 8 வருடம் ஆச்சு..! நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share