உங்களுக்கு என்ன தான்-யா பிரச்சனை..! மேடையில் நிருபர் கேட்ட கேள்வி.. சட்டென டென்ஷனான யோகிபாபு..!
பட விழாவில் நிருபர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு யோகிபாபு டெங்ஷனாக பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பலர் வந்தாலும், கடந்த ஒரு தசாப்தத்தில் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை பிடித்த நடிகராக யோகிபாபு திகழ்கிறார். தனது உடல் மொழி, எளிமையான காமெடி, அதே சமயம் உணர்ச்சிபூர்வமான நடிப்பின் மூலம், “காமெடியன்” என்ற அடையாளத்தைத் தாண்டி, கதாபாத்திர நடிகராகவும் வளர்ந்தவர் யோகிபாபு. ஆனால், இத்தனை வெற்றிகளுக்கிடையே, சமீப காலமாக அவர் குறித்து ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டு அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது.
அதாவது, “பட விழாக்களுக்கு வருவதில்லை”, “பணம் மட்டும் வாங்கிக்கொண்டு, சிறிய படங்களை புறக்கணிக்கிறார்” என்ற விமர்சனங்கள் தான் அவை. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் யோகிபாபுவிடம் நேரடியாக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, அவர் அளித்த பதில் தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் யோகிபாபு இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்ற நிலையை அடைந்துள்ளார். காமெடி நடிகராக அறிமுகமானாலும், காலப்போக்கில் அவரது கதாபாத்திரங்கள் பல்வேறு பரிமாணங்களை பெற்றன.
சில படங்களில் முழுக்க நகைச்சுவை, சில படங்களில் சமூக கருத்து, சில படங்களில் உணர்ச்சிகரமான நடிப்பு என பல விதமான ரோல்களில் நடித்துள்ள யோகிபாபு, இன்று பெரிய ஹீரோக்களின் படங்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். அதே நேரத்தில், சிறிய படங்களிலும் தொடர்ந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில், யோகிபாபு பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது, ஒரே நேரத்தில் பல பட விழாக்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறியது. அப்போது, அவர் எல்லா பட விழாக்களுக்கும் வர முடியாத சூழ்நிலை உருவானது. அந்த நேரத்திலிருந்து, சில தயாரிப்பாளர்கள் மற்றும் சில ஊடகங்கள் மத்தியில், “யோகிபாபு பெரிய நடிகராகி விட்டார்”, “பணம் வாங்கிக்கொண்டு விழாவுக்கு வர மறுக்கிறார்” என்ற பேச்சுகள் மெதுவாக பரவத் தொடங்கின. இவை அனைத்தும் வெளிப்படையாக பேசப்படாத விமர்சனங்களாக இருந்தாலும், சமீப காலமாக இந்த குற்றச்சாட்டு நேரடியாக கேள்வியாக யோகிபாபுவிடம் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: நடிகர் யோகி பாபு கிட்ட பிஸ்னஸ் பேசணுமா..! கவலைய விடுங்க.. அவர் கொடுத்த நம்பருக்கு டயல் பண்ணுங்க..!
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், யோகிபாபு கலந்து கொண்டிருந்த போது, அவரிடம் ஒரு செய்தியாளர் நேரடியாக கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியில், “நீங்க பணம் மட்டும் வாங்கிக்கொள்கிறீங்க. பெரிய படங்கள் தவிர, மற்ற படங்களின் விழாக்களுக்கு வருவதில்லை என்று உங்கள் மீது புகார்கள் சொல்லப்படுகிறதே…?” என கேட்கப்பட்டது. இந்த கேள்வி கேட்கப்பட்ட தருணத்தில், யோகிபாபு முகத்தில் சிறிது பதற்றம் தெரிந்ததாக கூறப்படுகிறது. அந்த கேள்விக்கு பதிலளித்த யோகிபாபு, வழக்கமான நகைச்சுவை கலந்த பதிலுக்கு பதிலாக, இந்த முறை நேரடியாகவும், உண்மையாகவும் சற்று கோபமாகவும் பேசினார். அவர் பேசுகையில், “இது நடந்து எத்தனை நாட்கள் ஆகிறது? ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சினை இது. அப்போ வந்து என்னிடம் கேட்டிருக்க வேண்டும். இப்போ என்ன நடக்கிறதோ, அதைப் பற்றித்தான் கேளுங்கள்” என்கிறார்.
இந்த வார்த்தைகளிலேயே, அவர் அந்த குற்றச்சாட்டால் எவ்வளவு மன உளைச்சலில் இருந்தார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. பின்பு யோகிபாபு தனது பதிலில், தன்னைப் பற்றிய ஒரு முக்கியமான விளக்கத்தையும் அளித்தார். “நல்ல தயாரிப்பாளர்கள் அத்தனை பேருக்கும் ஆதரவாகத்தான் நடந்திருக்கிறேன். நேரம் இருந்தால் பட விழாக்களுக்கு வரப்போகிறேன்” என்றார். இது, மறுப்பு அல்ல. அதே நேரத்தில், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வர இயலாது என்ற நிதர்சன உண்மையையும் அவர் சொன்னதாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இடத்தில், யோகிபாபு ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டினார். அதில் “நான் படத்தில் 4 அல்லது 5 சீன்கள் தான் நடிக்கிறேன். காமெடியனாக அழைத்தால் வரப்போகிறேன்” என்றார்.
இதன் மூலம், “முழு ஹீரோ போல் என்னை மையமாக வைத்து விழா நடத்தினால், அதற்கு நான் எப்படி வர முடியும்?” என்ற ஒரு மறைமுகமான கேள்வியையும் அவர் எழுப்பினார். மேலும் “நீங்கள் ஆளுயர கட்-அவுட் வைத்து அழைத்தால் நான் எப்படி வர முடியும்? என்னால் முடிந்த நிகழ்ச்சிகளுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். என்னால் முடிந்த நிகழ்ச்சிகளுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறேன்” என்று கூறினார்.
இந்த விவாதத்தின் இறுதியில், யோகிபாபு கூறிய வார்த்தைகள் அவரது அனுபவத்தை வெளிப்படுத்துகின்றன. அதில் “நான் சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. வளர்ச்சி வந்தால் சில பிரச்சினைகள் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போ பிரச்சினைகளை சந்தித்து வருவதால், வளர்ச்சி அடைந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்” என்றார்.
இந்த வார்த்தைகள், ஒரு நடிகர் வளர்ந்த பின் சந்திக்கும் விமர்சனங்கள், புரிதல் இல்லாத குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் ஒரே வரியில் சொல்லிவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். யோகி பாபுவின் இந்த பேச்சுக்குப் பிறகு, திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் இரு தரப்பு கருத்துகள் வெளிப்பட்டன.
ஆகவே யோகிபாபு தொடர்பான இந்த விவகாரம், ஒரு நடிகரின் வளர்ச்சி, அவரது நேரம், அவரது பொறுப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒரு பக்கம் ரசிகர்கள், மற்றொரு பக்கம் தயாரிப்பாளர்கள், மூன்றாவது பக்கம் ஊடகங்கள் இந்த மூன்றுக்கும் இடையில் நிற்கும் நடிகரின் நிலை எவ்வளவு சிக்கலானது என்பதையும், யோகிபாபுவின் இந்த பதில் வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு நாள் கூத்து.. ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! விளைவு.. ஆர்யன்கான், ஷில்பா ஷெட்டி விடுதிகள் மீது வழக்கு..!