×
 

குடிச்சா தியேட்டர்-ல Not Allowed...! 'காந்தாரா' படம் பார்க்க வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த படக்குழு..!

'காந்தாரா' படம் பார்க்க வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த படக்குழுவால் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்திய சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை முன்வைத்து பாரம்பரியத்தை சினிமா வடிவில் உயிர்ப்பிக்கத் துடிக்கும் இயக்குநர்கள் மிகக் குறைவே. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளில் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் தான் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கியும், நடிகராகவும் நடித்த "காந்தாரா" படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, தற்போது வெளிவரவுள்ள "காந்தாரா: சாப்டர் 1" திரைப்படம் மீண்டும் ஒரு மாயாவிய பாணியில் உருவாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகுந்த அளவில் உயர்த்தி உள்ளது.

இப்படம் அக்டோபர் 2ம் தேதி, உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்தப் படம், அதன் முதல் பாகத்தை விட இன்னும் ஆழமான பூர்விகப் பிணைப்புகள், ஆன்மிகச் சாயல்கள், மரபு மற்றும் மனித இயற்கை உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் பாரம்பரிய இசை, மாயாஜாலமான காட்சிகள், மற்றும் அற்புதமான ஒளிப்பதிவு என அனைத்தும் கலந்து ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் இருந்தது. ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகள், மீம்கள், விமர்சனங்கள் என ரசிகர்கள் ஆர்வம் வெடித்துக்கொண்டு வருகிறது.

இப்படி இருக்க ட்ரெய்லர் வெளியான சில நாட்களுக்குள், சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் வைரலாகும் நிலையில் வந்தது. அந்தப் போஸ்டரில், "காந்தாரா: Chapter 1-ஐ பார்ப்பதற்கு முன்: குடிக்க கூடாது, புகை பிடிக்க கூடாது, அசைவம் சாப்பிட கூடாது" என மூன்று விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. இந்த போஸ்டர் பார்ப்பதற்கே ஒரு ஆன்மீக கோவிலின் நுழைவாயில் கட்டுப்பாடுகளைக் போல இருந்தது. இதைக் கண்ட ரசிகர்கள் சிலர் அதனை மதிக்கும்படி கருத்து தெரிவித்தாலும், பெரும்பாலானவர்கள் "படத்தைப் பார்க்க முன்னாடி ஞானியாக ஆக சொல்லுறாங்களே", "இதெப்படி சினிமாவுக்கு ஏதோ பூஜை பண்ண போற மாதிரி இருக்கு" போன்ற கருத்துகளுடன் மீம்கள், ட்ரோல்கள் என சமூக வலைதளங்களில் தீவிரமான விவாதங்களாக மாற்றிவிட்டனர்.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் அடுத்த படத்தில் இவர் நடிக்கிறாராம்.. நிறைவேறப்போகும் ரோபோ சங்கரின் கனவு..!!

இந்த விவகாரம் அதிக அளவில் பரவ, ரசிகர்கள் குழம்பிய நிலையில் இருந்தனர். இதற்கு முடிவாக, தானாகவே ரிஷப் ஷெட்டி நேரில் விளக்கம் கொடுத்தார். அதில் "நானும் அந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நாங்கள் தயாரிப்பு குழுவோடு உடனே பேசி விசாரித்தோம். அது நாங்கள் வெளியிட்டது அல்ல. யாரோ ஒருவர்கள் அந்த போஸ்டரை தங்களாகவே உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் போலியானது" என அவர் கூறியுள்ளார். அதாவது, இது அதிகாரபூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்ட போஸ்டர் அல்ல. இது யாரோ ரசிகர் ஒருவர் அல்லது சமூக ஊடக பயனர் ஒருவர் செய்த பண்பாட்டியல் அடிப்படையிலான கருத்துப் போஸ்டர் என்கிறது. ஆனால் அது பெரும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

இந்த விவகாரம், ஒரு முக்கியமான விவாதத்துக்கும் வழிவகுக்கிறது – பாரம்பரியத்தின் மற்றும் ஆன்மீகத்தின் படம் ஒரு “தெய்வீக அனுபவம்” என்று மார்கெட்டிங் செய்தால் அது சரியா? எனவே காந்தாரா படம் அதன் முதல் பாகத்தில் இயற்கையோடு மனிதன் வலிமையாக பிணைந்திருக்கும் ஒரு மாந்தரக் கதையை அழகாக சொல்லியிருந்தது. அதேபோல, சாப்ட்டர் என்பது பின்புல கதையாக வரலாம் எனவும், அது ஆன்மீக அடையாளங்களுடன் கூடியது என முன் தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில், அந்த திரைப்படம் ஒரு ஆன்மீக அனுபவத்தை தரும் விதமாகவே உருவாக்கப்பட்டிருக்கும் என்றால், சிலருக்கு அது ஒரு புனித பயணமாகத் தோன்றலாம்.

ஆனால் அதற்கு மத சம்பந்தப்பட்ட கட்டுப்பாடுகளை சினிமா ஹால்களில் விதிப்பது என்பது, சினிமாவின் "அனைவருக்கும் திறந்த வாசல்" என்ற அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது என விமர்சனங்களும் எழுகின்றன. இந்த விவகாரம், சமூக ஊடகங்களில் ஒரு தகவல் எப்படி திரித்துவைக்கப்படுகிறது என்பதை ஒரு முறைமையாக காட்டுகிறது. யாராவது உருவாக்கும் போலி தகவல், ரசிகர்களிடம் தவறான நம்பிக்கையை உருவாக்குகிறது. அதற்கு தயாரிப்பு குழுவும் நேரத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும். ரிஷப் ஷெட்டி இந்த விவகாரத்தில் விரைவாக பதிலளித்தது, வதந்திகள் அதிகம் பரவாமல் தடுக்க உதவியது. இது ஒரு பொறுப்புள்ள செயல்.

ஆகவே காந்தாரா என்பது வெறும் ஒரு படம் மட்டுமல்ல, அது கலாச்சாரம், மரபு, மற்றும் ஆன்மீக அனுபவங்களை திரைப்பட வடிவில் வெளிப்படுத்தும் முயற்சி. அந்த அனுபவத்தில் ஒரு உண்மை மற்றும் கற்பனை கலந்து அமைந்திருக்கும் போது, அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது ரசிகர்களின் பார்வைதான் தீர்மானிக்கும். படம் வெளியாகும் நாளில், உண்மையான அனுபவம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக, அக்டோபர் 2 வரை காத்திருக்க வேண்டியது தான்.

இப்படி படம் குறித்த சர்ச்சைகள் ஒரு பக்கம் எழுந்தாலும், காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளதாம். அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் இன்ஸ்டாகிராமில் அதுவும் இந்திய அளவில் அதிக சேர் செய்யப்பட டிரெய்லர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது இப்படத்தின் டிரெய்லர். இந்த டிரெய்லர் சுமார் 1.2 மில்லியன் சேர் செய்யப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தாயாக மாறிய கத்ரீனா கைஃப்.. வெளியான BABY BUMP ஃபோட்டோ.. வாழ்த்தும் திரையுலகம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share