டாக்ஸிக் புரமோஷனில் ட்ரெண்டிங்கில் ருக்மிணி வசந்த்..!! கருப்பு உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்த சென்சேஷன் நடிகை..!
நடிகை ருக்மிணி வசந்த் கருப்பு உடையில் கலக்கும் கிளிக்ஸ் வைரல் ஆகி வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார் ருக்மிணி வசந்த்.
கன்னட திரையுலகில் தொடங்கிய இவரது பயணம், அடுத்தடுத்து வெளியான திரைப்படங்களின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடமும் கவனத்தை பெற்றது.
குறிப்பாக ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ருக்மிணியின் மார்க்கெட் மற்றும் ரசிகர் வட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது.
இதையும் படிங்க: விஜய்–சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!! மனுவை வாபஸ் வாங்கியாச்சி.. ஆனாலும் ஒன்னு சேரல ஏன்.. பிரபலம் சொன்ன கருத்து வைரல்..!
தற்போது யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம் மூலம் இன்னும் பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைய அவர் தயாராகி வருகிறார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் மற்றும் அடுத்தடுத்த புரமோஷன் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படக்குழுவில் ருக்மிணி வசந்த்தின் தோற்றங்களும் இணையத்தில் தனி கவனம் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: என் புருஷனும் என் தோழியும் ஒரே கட்டில்ல..!! கஷ்டத்தை சொன்னா.. டிஆர்பிக்காக இப்படி பண்ணுவீங்களா.. பிக்பாஸ் காமன் மேன் மீண்டும் சர்ச்சையில்..!