வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கும் நடிகை சான்வி மேக்னா..! லுக் லைக் போட்டோஸ் இதோ..!
நடிகை சான்வி மேக்னா பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்க்க சிறிய குழந்தை போன்ற வெகுளி முகம் கொண்ட சான்வி மேக்னா-வுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது.
முதலில் இவரை திரையில் கண்டவர்களுக்கு இவரை எங்கோ பார்த்ததை போல் உள்ளதே என தோன்றும்.
அந்த சந்தேகம் உண்மைதான் முதலில் நடிகை சான்வி மாடலிங்கில் பிசியாக இருந்தவர்.
அதுமட்டுமல்லாமல் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து உடலை அழகாக காண்பிக்கும் க்ரீம் விளம்பரத்தில் இருவரும் நடித்து இருந்தனர்.
இதையும் படிங்க: அசத்தும் அழகு அப்படியே நிலவு..! நடிகை சான்வி மேக்னா ஹார்ட் லுக் கிளிக்ஸ்..!
இதனை அடுத்து பல விளம்பரங்களில் நடித்து வரும் சான்வி, மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோக்கள் என்றால் முதல் ஆளாக சென்று பங்கேற்று தனது அழகால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பார்.
அதுமட்டுமல்லாமல் இவரை போலவே இவரது தங்கையும் அழகில் ஒருதுளி கூட குறையாமல் இருக்கிறார்.
இப்படி விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த சான்விக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் திரைப்படம் என்றால் அதுதான் சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன்,
குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படம்.
இந்த படத்தில் நடித்து தற்பொழுது பிரபலமாகி இருக்கிறார் நடிகை சான்வி மேக்னா.
இப்படத்தில் இவர் ஃபேமஸ் ஆக காரணம், மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார்.
இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. எந்த படத்தை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார் நடிகை சான்வி.
இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பட வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்கிறது.
என்னதான் படம், மாடலிங், என பிசியாக இருந்தாலும், தனது இன்ஸ்ட்டா தளத்தில் தனது ரசிகர்களுக்காக போட்டோக்களை பதிவிட என்றும் மறந்ததில்லை.
இதையும் படிங்க: அசத்தும் அழகு அப்படியே நிலவு..! நடிகை சான்வி மேக்னா ஹார்ட் லுக் கிளிக்ஸ்..!