கர்ப்பமாக இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி..! சோபிதா ரசிகர்கள் ராக்..! சமந்தா ரசிகர்கள் ஷாக்..!
நாக சைதன்யாவின் மனைவி சோபிதா கர்ப்பமாக உள்ளார்.
சோபிதா துலிபாலா என்ற பெயரை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முக்கிய காரணமானவர் நாக சைதன்யா. ஏனெனில் இவர் என்று சோபிதாவை காதல் திருமணம் செய்தாரோ அன்றிலிருந்து தான் இவர் அதிகமாக மக்கள் கண்களில் பட ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சோபிதா நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த கதை கேட்க அவ்வளவு அழகாக இருக்கும்.
இவர்களது திருமணத்தை பற்றி கூறுவதற்கு முன் நாக சைதன்யாவின் முதல் திருமணத்தை குறித்து பார்க்க வேண்டும். ஏனெனில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை முதலில் காதலித்து வந்தவர் தான் நடிகை சமந்தா. இவர்கள், இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சந்தோஷமாக இருந்தவர்களின் வாழ்வில் யார் கண்பட்டதோ தெரியவில்லை நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர்.
இதையும் படிங்க: என்னமா இப்படி பண்ணுறீங்களேமா..! ரசிகர்களுக்கு பல்பு கொடுத்த நடிகை சமந்தா..!
இப்படியிருக்க, சமந்தாவும் அவரது கணவரும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என மக்கள் காத்து கொண்டிருந்த சூழலில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த இவர்களது திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.
இந்த சூழலில் தான் சோபிதா, நாகசைதன்யாவை காதலித்த தருணங்களை பற்றி பகிர்ந்திருந்தார். அதில், ஒருநாள் தான் ரசிகர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கூறிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒருவர் 'உங்களை நாக சைதன்யா இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் பொழுது நீங்கள் மட்டும் ஏன் அவரை ஃபாலோ செய்யவில்லை?' என கேட்டிருந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், எனது செல்போனை எடுத்து அவரது இன்ஸ்டா கணக்கிற்கு சென்று பார்த்தேன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஏனெனில் எனக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அவர் என்னை ஏற்க்கனவே ஃபாலோ செய்து எனது பதிவுகளுக்கு லைக் போட்டு இருந்தார். அதற்கு பின்பு தான் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்து, அது காதலாக மாறி தற்பொழுது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது என கூறினார்.
இந்த நிலையில், பல இடங்களுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்று ஜாலியாக இருந்த இந்த ஜோடி திடீரென எங்கும் வெளி வருவதில்லை. அதுமட்டுமல்லாமல் திருமணம் முடிந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் இதுவரை டைட்டான உடைகளை மட்டுமே அணிந்து வந்த சோபிதா சில நாட்களாக லூசான ஆடைகளை அணிந்து கொண்டு செல்வதால் கண்டிப்பாக அவர் கர்ப்பமாக தான் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகினறனர். ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வராததால் கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு இப்படி ஒரு ரசிகரா..? இதெல்லாம் தேவையா.. கொஞ்சம் ஓவரா தெரியல..!