×
 

ஒரே வார்த்தையில் தயாரிப்பாளரை காலி செய்த நயன்தாரா..! ஹீரோ மாஸ் தான் ஆனால் நயன் டபுள் மாஸ்..!

தன்னை சந்தித்த தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

நயன்தாராவின் அறிமுகப்படமான 'ஐயா' திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். தனது வெகுளித்தனமான நடிப்பில் அப்பொழுதே ரசிகர்களை உருவாக்கியவர். அதன் பின் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தவர். நாளடைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்து, விஜயின் சிவகாசி படத்தில் "நான் சூப்பர் ஸ்டார் ஜோடி" என்ற பாட்டுக்கு நடனமாடி  நயன்தாரா என்றாலே 'சூப்பர் ஸ்டார் ஜோடி' என்ற புனைப்பெயரைப் பெற்றார்.

நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பின்னர் திரைத்துறையை விட்டே வெளியே செல்ல முடிவெடுத்தார். ஆனால் சோதனையை சாதனையாக மாற்ற முடிவு எடுத்த நயன்தாரா தனது கடின உழைப்பால் இன்று கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். ஒரு காலத்தில் நயன்தாராவை விமர்சனம் செய்தவர்கள் கூட வாயடைத்துப் போகும் அளவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி, விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, அழகான குழந்தைகளுக்கு தாயாக மாறி... குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய இடத்தையும் பிடித்து சாதனை பெண்ணாக வலம் வருகிறார்.

இதையும் படிங்க: ஓடிடியில் ஃபிளாப் ஆன நயன்தாராவின் "டெஸ்ட்"..! உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி..!

இந்த சூழலில் தன்னை இனி யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என நயன்தாரா கூற, அது மிக பெரிய சர்ச்சையாக மாறியது. இதனை அடுத்து முத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெலுங்கில் நடிகை அனுஷ்காவை "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை படத்தில் போடும் தகவலை அறிந்த பின் படக்குழுவினருக்கு நயன்தாரா தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஆனால் அவர்கள் பட்டங்களை எல்லாம் நீக்க முடியாது என சொன்னதால் தனது இமேஜ் குறைந்து விடும் என்பதற்காக தன்னை யாரும் இனி "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம் என கூறினார் என தெரிவித்தார். 

YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் "டெஸ்ட்". இந்த படம் ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை கொடுக்கும் என நினைத்த அனைவருக்கும் இந்த படம் பெரிய அடி கொடுத்துள்ளது. காரணம் இந்த படம் மொத்தமாக ஃபிளாப் ஆனது. இந்த சூழலில் எஸ்.வி.சந்திரசேகர் நயன்தாராவுக்கு சாபம் விட்டதால் தான் படம் ஓடவில்லை என பலரும் கூறிவருகின்றனர்.

இப்படி நயன்தாரா என்ன தான் பல கஷ்டங்களையும் விமர்சனங்களையும் தன் வாழ்க்கையில் சுமந்தாலும் அதனை முழுவதுமாக முறியடித்து மேலே உயர்ந்து கொண்டு தான் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜவான் படத்திற்கு பிறகு நயன்தாராவின் புகழ் பாலிவுட்டை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது, அனில் ரவிபுடி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் புதிய படம் ஒன்று  உருவாகி வருகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என நினைத்த தயாரிப்பாளர்கள், நயன்தாராவிடம் படம் குறித்து பேசியுள்ளனர். 

நயன்தாராவுக்கு படம் பிடித்து போக, இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இதனால் ஒரு கணம் மகிழ்ச்சியான தயாரிப்பாளர்களை அடுத்த நொடியே சோகத்தில் ஆழ்த்தினார் நயன்தாரா. முதலில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அவர், பின்பு சம்பளமாக ரூ.18 கொடியை கேட்க தயாரிப்பாளர்கள் வாயடைத்து போகினர். காரணம் என்னவெனில் இதுவரை படங்களுக்கு ரூ.10 கோடி மட்டுமே சம்பளம் வாங்கும் நயன்தாரா ஒரேடியாக ரூ.8 கோடியை அதிகரித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: சேலையில் கிளாமராக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்...! புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share