சமந்தா போட்ட ஒரு லைக்..! நாக சைதன்யாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்..!
இன்ஸ்ட்டாவில் சமந்தா போட்ட ஒரு லைக்கால் குழம்பி காணப்படுகின்றனர் அவரது ரசிகர்கள்.
இந்திய சினிமாவில் அனுஷ்க்காவிற்கு அடுத்து ரசிகர்களை அதிகம் கொண்ட நடிகை என்றால் அவர் தான் நடிகை சமந்தா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து, சமந்தா நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்கள் தான். குறிப்பாக அவர் நடிப்பில். வெளியான "நான் ஈ" திரைப்படத்தில் சமந்தாவின் தோற்றம் அவரது அழகுக்கே கிடைத்த பரிசு எனலாம் அப்படி இருக்கும்.
இப்படி திரை துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் இத்திருமணம் நடைபெற்றது. நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு பின்பு ஜாலியாக உள்ளேன்..! தொகுப்பாளினி பிரியங்கா அசத்தல் பேச்சு..!
இதனை அடுத்து, நீண்ட நாட்களாக தனிமையில் இருந்த நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியாகி பேசுபொருளானது. வெளியான செய்தி உண்மைதான் என்பதற்கேற்ப இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை இவர்களது திருமணம் நடைபெற்றது.
இதனை பார்த்து வேதனை அடைந்த சமந்தா, இனி என் வாழ்க்கையில் சினிமா தான் எல்லாமே.. அதுதான் என் முதல் காதலன் என சொல்லி மீண்டும் சினிமாவில் நுழைந்து தற்பொழுது பல அதிரடி படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ரூ.1600 கோடி செலவில் உருவாக இருக்கும் இரண்டு பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து படங்களை தயாரித்து வருகிறார். அனைத்து இடங்களுக்கும் சோலோவாக சென்று தனது வாழ்க்கையை நிம்மதியாக கழித்து வருகிறார்.
இப்படி இருக்க, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நோய்வாய்ப்பட்ட மனைவியை ஆண்கள் விட்டு செல்வது' தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய வீடியோ ஒன்று ட்ரெண்டிங்கில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது லைக்குகளை பதிவிட்டும் கருத்துக்களை அள்ளித்தெளித்தும் வருகிறார்கள். இந்த நிலையில், அந்த வீடியோவுக்கு சமந்தாவும் தனது லைக்கை போட்டு வந்தார்.
அந்த பதிவுக்கு சமந்தா லைக் போட்டதை பார்த்த ரசிகர்கள், 'இந்த வீடியோவுக்கு சமந்தா ஏன் லைக் போட்டு இருக்கிறார். அப்பொழுது நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்ததற்கு அவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தது காரணம் இல்லையா..? சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணமா? என அவர் போட்ட ஒற்றை லைக்கால் இணையத்தையே அலறவிட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
எந்த காரணமாக இருந்தாலும் சரி சமந்தா உங்களுக்கான சிறந்த அன்பான துணியை நீங்கள் தேடி சந்தோஷமாக வாழ வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளிவரும் நடிகை வரலட்சுமியின் திரில்லர் திரைப்படம்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!