×
 

வலிமைக்கு ஆண், பெண் பேதமில்லை.. உங்கள் பார்வைகளை மாத்துங்க..! நடிகை சம்யுக்தா ஹெக்டே ஓபன் டாக்..!

நடிகை சம்யுக்தா ஹெக்டே, வலிமைக்கு ஆண் பெண் பேதமில்லை என பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதன் பின்னர், ‘பப்பி’, ‘தேள்’, ‘மன்மத லீலை’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வெறும் நடிப்பில் மட்டும் அனைவரையும் கவராமல் சமூகத்திற்குத் தேவையான பல முக்கியமான கருத்துகளை முன்வைக்கும் நடிகையாகவும் இருக்கும் சம்யுக்தா மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

இப்படி இருக்க அண்மையில், தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பாசிடிவ் மற்றும் சமூகத்தைக் கேள்வி கேட்கும் வகையில் பதிவு ஒன்றை  பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், தன்னுடைய உடற்பயிற்சி (ஜிம்) அனுபவங்களையும், அதைச் சுற்றியுள்ள சமூக அணுகுமுறைகளையும், பெண்கள் எதிர்கொள்ளும் பார்வையையும், மாற்றம் தேவைப்படும் இடங்களையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வலிமை என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் தான்..! நாங்களும் உங்கள் போல் ஜிம்மில் நரம்புகள் புடைக்கும் அளவுக்கு பயிற்சி செய்கிறோம். ஒழுக்கம், கட்டுப்பாடுகளை நாங்களும் பின்பற்றுகிறோம். வலிமைக்கு பாலின வேறுபாடே இல்லை. ஜிம்மில் வலிமை கொணரப்படுகிறது, கொண்டாடப்படுகிறது.

புதிய முயற்சிகளுக்காக பெண்கள் அங்கீகரிக்கப்படும்போது, தடுக்கப்படாமல் முன்னேற முடியும். தேவையற்ற பார்வைகள் குறையும். நாங்களும் மனிதர்களே.. கடுமையான பயிற்சி, கட்டுப்பாடான வாழ்க்கை முறை மூலம் பலவீனங்களை வலிமையாக மாற்றிக்கொள்கிறோம்" என பதிவிட்டு இருக்கிறார். அவரது இந்த பதிவு ஒரு நவீனமான, சமத்துவ பார்வையை வெளிப்படுத்துகிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்யும் இடங்களில், ஆண்கள் காட்டும் தேவையற்ற கண்கள், விமர்சனங்கள், பார்வை ரீதியான பாதிப்புகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதையும், பெண்கள் தங்களது முயற்சிக்கு உரிய மரியாதை பெறவேண்டும் என்பதையும் இந்த பதிவில் அழுத்தமாகக் கூறுகிறார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் நடிகை சாக்ஷி அகர்வால்..! சோலோவாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

அதுமட்டுமல்லாமல், @republic_of_domination என்ற ஜிம் சமூகத்தை குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். அங்கு உழைப்பும், அர்ப்பணிப்பும் பாலினமின்றி மதிக்கப்படுகின்றன என்றும் கூறியிருக்கிறார்.சம்யுக்தாவின் இந்த பதிவு ரசிகர்கள், ஜிம்மில் பயிற்சி செய்யும் பெண்கள், உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் "இது போன்ற வாய்ஸ் தேவை", “பெண்களின் முயற்சி எப்போதும் நியாயமானதே” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமூகத்தில் இன்னும் பல இடங்களில் பெண்களின் உடல் முயற்சிகளை குறைத்து மதிப்பது, கேலி பார்வையில் பார்ப்பது போன்ற செய்திகள் வெளியாகும் இந்த நேரத்தில், சம்யுக்தா ஹெக்டே அளித்த இந்த வலிமையான குரல், பலருக்கும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகவே, சம்யுக்தா ஹெக்டேவின் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. பலரும் அவரது நேர்மையான பதிலை ஆதரித்து வருகிறார்கள். 

இதையும் படிங்க: வித்தியாசமான உடையில் மொத்த அழகையும் வெளிப்படுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்..! போட்டோஸ் வைரல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share