×
 

‘கட்சி சேர’ பாடல் புகழ் சம்யுக்தா விஸ்வநாதன்..!! சேலையில் கலக்கும் செம ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்..!

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் சேலையில் கலக்கும் செம ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.


சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி, அதன்பிறகு சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி வரும் இளம் நடிகைகளின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் முக்கியமான இளம் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்.

குறிப்பாக ‘கட்சி சேர’ ஆல்பம் பாடல் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான இவர், தற்போது திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: காரில் கடத்தப்பட்ட நடிகை நமீதா.. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்..!! ரசிகரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. ஷாக்கில் நெட்டிசன்கள்..!


‘கட்சி சேர’ பாடலின் மூலம் இணையத்தில் கவனம் பெற்ற சம்யுக்தா, அதன்பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

அவருடைய நடிப்பு, திரையில் தோன்றும் விதம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் என அனைத்துமே ரசிகர்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.


சமீபத்தில் அவரது நடிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து மேலும் சில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

குறிப்பாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘Im Game’ மற்றும் ‘மிஸ்டர் பாரத்’ ஆகிய திரைப்படங்கள் அவரது கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.


சம்யுக்தா விஸ்வநாதன் என்ற பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியதில் ‘கட்சி சேர’ பாடலுக்கு முக்கிய பங்கு உண்டு.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடிய அந்த ஆல்பம் பாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

 

இதையும் படிங்க: மமிதா பைஜுவுக்கு அடுத்தடுத்து குவியும் பெரிய வாய்ப்புகள்..!! துல்கர் சல்மான்.. மாதவன் போன்றோர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share