×
 

அழகே பொறாமை படும் பேரழகில்.. துரந்தர் பட கதாநாயகி நடிகை சாரா அர்ஜுன்..!

துரந்தர் பட கதாநாயகி நடிகை சாரா அர்ஜுன், அழகில் பட்டைய கிளப்பும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காலப்போக்கில் தன்னை ஒரு முழுமையான நடிகையாக வளர்த்துக் கொண்டவர்களில் முக்கியமானவர் சாரா அர்ஜுன்.

மிகச் சிறிய வயதிலேயே இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சாரா, இன்று கதாநாயகியாக உயர்ந்து நிற்பது, அவரது பயணத்தின் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தணிக்கை சான்றிதழ் வழங்குவதை நிறுத்த சொன்னது யார்..? ஜனநாயகன் விவகாரத்தில் நீதிபதி சரமாரி கேள்வி..!

சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, சாரா அர்ஜுன் மீண்டும் ரசிகர்கள் மற்றும் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

சாரா அர்ஜுன் முதன்முதலில் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானது, இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ திரைப்படத்தின் மூலம்.

அந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகளாக நடித்திருந்த சாராவின் நடிப்பு, படம் வெளியான போதே பெரும் பாராட்டுகளை பெற்றது.

குழந்தை நட்சத்திரம் என்ற வரம்பிற்குள் இல்லாமல், கதையின் உணர்ச்சிப் புள்ளிகளை அழுத்தமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, விமர்சகர்களையும் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது.

பல காட்சிகளில் விக்ரமுடன் இணைந்து அவர் காட்டிய உணர்ச்சிகள், படத்தின் மிக முக்கியமான பலமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, ‘சைவம்’ திரைப்படத்தில் சாரா அர்ஜுன் நடித்த கதாபாத்திரம் அவரின் நடிப்புத் திறனை இன்னும் உயர்த்திக் காட்டியது.

அந்த படத்தில், குழந்தை மனதின் தூய்மை, குடும்ப உறவுகள், கிராமத்து சூழல் ஆகியவற்றை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

‘சைவம்’ படம் மூலம், சாரா ஒரு சாதாரண குழந்தை நடிகை அல்ல, எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வளரக்கூடிய திறமை கொண்டவர் என்பதைக் காட்டினார்.

அந்த காலகட்டத்தில், சாராவை “தமிழ் சினிமாவின் நம்பிக்கை தரும் குழந்தை நட்சத்திரம்” என பலரும் பாராட்டினர்.

 

இதையும் படிங்க: சேலையிலும் அழகை மறைக்காமல் வெளிப்படுத்திய நடிகை மாளவிகா மோகனன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share