×
 

இங்கு குற்றங்கள் அதிகம் ஆனால் நீதிமன்றம் குறைவு..! பருத்திவீரன் சரவணனின் ஆதங்க குரல் இணையத்தில் வைரல்..!

'சட்டமும் நீதியும்' என்ற வெப்சீரிஸில் நடித்துள்ள பருத்திவீரன் சரவணனின் நிதிமன்றத்திற்குரிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கான அடையாளத்தை  படைத்தவர் தான் நடிகர் சரவணன், இவர் தற்போது ஒரு சமூக அக்கறைமிக்க கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'சட்டமும் நீதியும்' என்ற வெப்சீரிஸில் அவர் நடித்து உள்ள கதாபாத்திரம், நீதிக்காக போராடும் ஒரு வக்கீலின் நேர்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. இப்படத்தை இயக்கிய பாலாஜி செல்வராஜ் இந்த வெப்சீரிஸில், நீதிக்காக போராடும் வழக்கறிஞராக சரவணனை அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளார்.

இந்த கதை உண்மையான ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. மேலும், ஐகோர்ட் வளாகத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரிழக்கும் நிகழ்வின் பின்னணியை அடிப்படையாக கொண்டு இந்த சீரிஸ் அமைந்துள்ளது. அந்த பெண்ணுக்கு நீதியைப் பெற்று தரப் போராடும் ஒரு வக்கீலாகவே சரவணன் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் குறித்து நடிகர் சரவணன் உணர்வுபூர்வமாக பேசியது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதன்படி, அவர் பேசுகையில், "நான் டிராபிக் ராமசாமி மாதிரி நீதிக்காக போராடுகிற கேரக்டரில் நடித்து இருப்பதாக பலர் பாராட்டுகிறார்கள். நிஜ டிராபிக் ராமசாமியுடன் எனக்கு பழக்கம் உண்டு. அவர் செய்த சாதனைகள் அதிகம். இந்த வெப்சீரிஸில் நீதி கிடைப்பதாக கதை முடிகிறது. ஆனால் நிஜத்தில் எல்லாம் அந்த மாதிரியாக கிடைக்கவில்லை.

நானே சில வழக்குகளை போட்டிருக்கிறேன். 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். இன்னும் அவை முடிவுக்கு வரவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம். ஆனால் நீதிமன்றங்கள் குறைவாக உள்ளன. இதனால் நீதிக்கு நேரம் எடுக்கும்." என பேசியுள்ளார். இப்படியாக இன்றைய சமூக நிலையை அழகாக எடுத்துச் சொல்லி சென்றார் சரணவனன். இதனை தொடர்ந்து, இப்படத்தின் இயக்குனர் பாலாஜி செல்வராஜுவைக் குறித்து பேசிய சரவணன், "நல்ல கதையை கொடுத்துள்ளார். 15 நாட்களுக்குள் இந்த வெப்சீரிஸை நடித்து முடித்தோம்.

இதையும் படிங்க: என்ன.. விஜய் தனது மனைவியை விட்டு பிரிந்து விட்டாரா..! நடிகர் சஞ்சீவ் சொன்ன விஷயம் வைரல்..!

ஆனால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது, இதற்கு எல்லாம் முழு காரணம் டைரக்டர் சார் தான்" என பெருமையாக பேசினார்.  இந்த வக்கீல் கதாபாத்திரத்தின் மூலம் சரவணன், தன் நடிப்பின் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ளார். தன்னுடைய சொந்த அனுபவங்களையும் கொண்டு அந்த உணர்வுகளை கதாபாத்திரத்தில் வெளிப்படையாக காட்டி அசத்தியுள்ளார். இது நடிகராக அவருக்கு ஒரு புதிய தொடக்கமாக அமைந்துள்ளது என அனைவரும் பாராட்டுகின்றனர். சமூகநீதியை முன்னிறுத்தும் இந்த தொடர், பார்வையாளர்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  

நியாயம் என்பதைக் குறித்து சிந்திக்க வைக்கும் இந்த வெப்சீரிஸும், அதன் கதாபாத்திரமும் நிச்சயமாக பாராட்டுக்குரியவையே.

இதையும் படிங்க: மல்லிகை பூவை போல... வெள்ளை நிற சேலையில் மனதை கொள்ளையிட வந்த நடிகை மிருணாளினி ரவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share