வந்தாச்சு...'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் முதல் ரிவியூ..! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான விமர்சனம்..!
டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கான அட்டகாசமான விமர்சனத்தை கொடுத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
இந்த ட்ரெய்லரை பார்த்த பலருக்கும் படம் பிடித்து போக, தற்பொழுது இப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருகின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், ஒரு படம் நடிப்பதற்கு முன்பு கண்டிப்பாக நன்றாக வரும் என்கின்ற 100 சதவீத நம்பிக்கையில் தான் படம் செய்கிறோம். இப்படி இருக்க, இப்படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சமுத்திரகனி, டி.ஜே ஞானவேல், புஷ்கர் காயத்ரி, விஜய் ஆண்டனி, தமிழரசன் பச்சைமுத்து முதலானோர் கலந்து கொண்டு படத்தை குறித்து மகிழ்ச்சியாக பேசினர். பின்பு இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படத்தை குறித்து புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: பட ப்ரமோஷனில் ப்ரப்போஸ் செய்த இயக்குனர்..! ஆனந்த கண்ணீர் வடித்த காதலியின் வீடியோ வைரல்..!
அதன்படி, "இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை கூறுவேன். உண்மையிலேயே இந்த படம் மிகவும் அருமையாகவும் மகிழ்விக்கும் வகையிலும் பெருமையாகவும் இருந்தது. இந்த படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக இலங்கை தமிழர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றே சொல்வர். சசிகுமாருக்கு எப்படி சுப்பிரமணியபுரமோ, எனக்கு எப்படி நாடோடிகளோ அந்த வகையில் உங்களுக்கு தான் இந்த படம். இதனை உங்களால் வெல்லவே முடியாது. இந்த படம் அறத்தை பற்றி சொல்லும் படம், அன்பு அதிகமாக கொடுக்கும் படம், அதுமட்டுமல்லாமல் நேர்மையான படம்" என புகழ்ந்து தள்ளினார்.
இதனை கேட்டு ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலாக இருக்க, டூரிஸ்ட் ஃபேமிலி முழு படத்தையும் பார்த்த லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ்குமரன் படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார். அதன்படி, "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தை பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது; மனதையும் உருக்கிய ஒரு படமாக அமைந்தது. சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பு மிகவும் புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது.
படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். மில்லியன் டாலர்ஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள "டூரிஸ்ட் ஃபேமிலி" மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்! கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய படம் இது. என புகழாரம் சூட்டியுள்ளார்.
இவரது இந்த விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: "நம்பி வாங்க சந்தோஷமா போங்க"..! "டூரிஸ்ட் ஃபேமிலி" படம் குறித்து பேசிய சமுத்திரக்கனி..!