கருப்பு புடவையில் இளசுகளை மயக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை அஷ்வினி..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!
விஜய் டிவி சீரியல் நடிகை அஷ்வினியின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலே குடும்ப ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கும்.
அதில் நடிக்கும் கலைஞர்கள் தங்களது இயல்பான நடிப்பு திறமையால் வீட்டுக்குள் ஒருவர் போலவே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ‘நம்ம வீட்டுப் பொண்ணு’, ‘தங்கமகள்’ போன்ற பிரபல தொடர்களில் நடித்த நடிகை அஷ்வினி, தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர்.
இதையும் படிங்க: ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! அனிருத் கொடுத்த புதிய அப்டேட்.. "One Name" ட்ராக் இன்று வெளியீடு..!
இந்த இரண்டு சீரியல்களிலும் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி மிகுந்த நடிப்பு, குடும்ப பார்வையாளர்களிடையே பெரிய அளவில் கவனம் பெற்றது.
குறிப்பாக, கதாபாத்திரத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் அவரது முகபாவனைகள் மற்றும் இயல்பான நடிப்பு பாணி, அவரை சீரியல் ரசிகர்களின் பிடித்த நடிகைகளில் ஒருவராக மாற்றியது
.
சின்னத்திரையில் மட்டுமல்லாமல், டிஜிட்டல் தளங்களிலும் தனது நடிப்பை விரிவுபடுத்தியுள்ளார் அஷ்வினி.
அந்த வகையில் அவர் நடித்த ‘உப்பு புளி காரம்’ என்ற வெப் தொடர், இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
OTT தளங்களில் வெளியாகும் தொடர்களில் நடிப்பது மூலம், புதிய தலைமுறை ரசிகர்களிடமும் அவர் கவனத்தை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: நான் பிகினி போட்டா உங்களுக்கு என்ன..!! என் லிமிட் எனக்கு தெரியும்.. உங்க வேலைய பாருங்க.. கடுப்பான மாளவிகா மோகனன்..!