×
 

‘மகாநதி’ சீரியல் கங்காவா இது..?... மணப்பெண் கோலத்தில் அசத்திய நடிகை தாரு..!! புதிய போட்டோஷூஸ் இணையத்தில் வைரல்..!

மணப்பெண் கோலத்தில் அசத்திய நடிகை தாருவின் புதிய போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் கடந்த சில ஆண்டுகளாக பல புதிய முகங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


ஒரு சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும் நடிகர், நடிகைகள் ஏராளம்.

அந்த வரிசையில் தற்போது குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தாரு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகாநதி’ சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பேரண்ட் சேலையில் கலக்கல் லுக்கில் சிறகடிக்க ஆசை ரேகா..!! கிளாமரோடு கலந்த கவர்ச்சி போட்டோஸ் வைரல்..!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றாக ‘மகாநதி’ சீரியல் இருந்தது.

குடும்பம், காதல், உறவுகள், உணர்ச்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இந்த தொடர், ஒளிபரப்பான காலம் முழுவதும் நிலையான ரசிகர் ஆதரவை பெற்றது.

குறிப்பாக விஜய் – காவேரி ஜோடியின் காதல் கதை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர்களின் திரைவேதியியல், குடும்ப பின்னணியில் அமைந்த காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை இந்த சீரியலை டிஆர்பி பட்டியலில் முன்னணியில் வைத்தன.

நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. சீரியல் முடிவடைந்தாலும், அதில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கு கிடைத்த புகழ் இன்னும் குறையவில்லை.

ரசிகர்கள் தொடர்ந்து அவர்களின் புதிய அப்டேட்களை சமூக வலைதளங்களில் ஆர்வமாக பின்தொடர்ந்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ‘ஆபரேஷன் சேஃபத் சாகர்’ டிரெய்லர் விழாவில் மாவுக்கட்டுடன் வந்த சித்தார்த்..!! மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகரால் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share