×
 

அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் திவ்யா கணேசன்..!! சேலையில் சிம்பிளாக வலம் வரும் போட்டோஸ் வைரல்..!

சேலையில் சிம்பிளாக வலம் வரும் நடிகை திவ்யா கணேசனின் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பத் தொடரான ‘பாக்கியலட்சுமி’ தமிழ்நாட்டு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றாகும்.

சாதாரண நடுத்தர குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க: பாத்ரூமில் மாடர்ன் உடையில் நடிகை யாஷிகா ஆனந்த்..!! கிளாமரில் இளசுகளை சிதறவிடும் போட்டோஸ் இதோ..!

அந்த வரிசையில், ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகை திவ்யா கணேசன்.

இயல்பான நடிப்பு, எளிமையான தோற்றம் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றால், திவ்யா கணேசன் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பான உயிர் கொடுத்தார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக குடும்ப காட்சிகளில் அவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. ‘பாக்கியலட்சுமி’ தொடரின் வெற்றியில் ஜெனி கதாபாத்திரமும் முக்கிய பங்கு வகித்ததாக சின்னத்திரை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த தொடரை தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அன்னம்’ தொடரிலும் திவ்யா கணேசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆரம்பத்தில் இந்த தொடரிலும் அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் சில காரணங்களால் அவர் அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகியதாக தகவல்கள் வெளியாகின. இது அவரது ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

சின்னத்திரையில் தொடர்ந்து கவனம் பெறும் நடிகையாக இருந்த திவ்யா கணேசன், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். 

இதையும் படிங்க: சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. நடிகர் அஜித் குமாரின் தாய் மரணம்..!! மனம் உடைந்த கமல்ஹாசன் இரங்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share