'சிறகடிக்க ஆசை' மீனாவுக்கு பிறந்த நாள்..! மகிழ்ச்சியான தருணங்களை பதிவு செய்த கோமதி..!
சிறகடிக்க ஆசை கதையாகி கோமதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ‘சிறகடிக்க ஆசை’ இன்று குடும்ப ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீரியலின் கதைக்களம், உணர்வுபூர்வமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக இந்த தொடரில் ‘மீனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை கோமதி ப்ரியா மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளார்.
மீனா கதாபாத்திரம் மூலம் வீட்டிலிருக்கும் பெண்கள் முதல் இளைஞர்கள் வரை பல தரப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார் கோமதி ப்ரியா. எளிமை, தைரியம், உணர்ச்சி மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன உறுதி ஆகியவற்றை ஒருங்கிணைத்த இந்த கதாபாத்திரத்தில் அவர் காட்டும் நடிப்பு, அவரை ஒரு திறமையான நடிகையாக ரசிகர்களிடையே நிலைநிறுத்தியுள்ளது. சீரியலில் வரும் பல காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, கோமதி ப்ரியாவுக்கான ரசிகர் வட்டாரத்தை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்த சீரியலுக்கு முன்பாகவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வேலைக்காரன்’ தொடரில் நடித்திருந்தார் கோமதி ப்ரியா. அந்த தொடரில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும், உண்மையான அடையாளத்தையும் பெரிய ரீச்சையும் அவருக்கு கொடுத்தது ‘சிறகடிக்க ஆசை’ என்றே சொல்லலாம். இந்த சீரியல் மூலம் அவர் ஒரு ‘ஹவுஸ் ஹோல்ட் நேம்’ ஆக மாறியுள்ளார்.
இதையும் படிங்க: வெளியானது ஸ்ரீராம் கார்த்தியின் 'மைலாஞ்சி' பட ட்ரெய்லர்..! அஜயன் பாலா இயக்கம் என்பதால் குஷியில் ரசிகர்கள்..!
தமிழ் மொழியைத் தாண்டி, கோமதி ப்ரியா தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் சீரியல் வாய்ப்புகளைப் பெற்று பிஸியாக நடித்து வருகிறார். மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடிப்பது எளிதான விஷயம் அல்ல. மொழி, கலாசாரம், நடிப்பு பாணி என பல வேறுபாடுகளை சமாளித்து அவர் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இதுவே அவரை பல தயாரிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்க்க காரணமாக அமைந்துள்ளது.
அண்மையில் தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ‘மகாநதி’ சீரியலின் மலையாள ரீமேக்கில், முக்கிய கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியா புதியதாக நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த புதிய மலையாள சீரியல் தொடங்கியுள்ள நிலையில், அவரது நடிப்புக்காக அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் மலையாள ரசிகர்களிடையேயும் அவர் தனி இடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் கோமதி ப்ரியா, தனது பிறந்தநாளை மலையாள சீரியல் படப்பிடிப்பு தளத்தில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். வழக்கமாக குடும்பம், நண்பர்கள் சூழ பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர்கள், இந்த முறை படப்பிடிப்பு குழுவுடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி, சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்ட அந்த தருணங்களின் புகைப்படங்களை கோமதி ப்ரியா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அந்த பதிவில் கோமதி ப்ரியா மிகவும் உணர்வுபூர்வமான ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார். அதில், இந்த ஆண்டு பிறந்தநாள் தனது வாழ்க்கையில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருந்ததாகவும், இதுவரை அனுபவிக்காத அளவுக்கு அன்பும் பரிவும் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், பிப்ரவரி மாதமே தன்னுக்குப் புனிதமான மாதமாக மாறிவிட்டது என்றும், புதிய தொடக்கம், புதிய சீரியல், ஆன்மீக வளர்ச்சி, உள்ளார்ந்த அமைதி, படைப்பாற்றல் ஆகியவை அனைத்தும் இந்த மாதத்தில் ஒன்றாக இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னைத் தான் புரிந்துகொண்டு, வாழ்க்கையின் நோக்கத்துடன் இணைந்து செல்லும் ஒரு கட்டத்தை தற்போது அனுபவித்து வருவதாகவும் அவர் எழுதியுள்ளார்.
மேலும், “2026 is not just another year—it is my year” என்ற வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தனது வாழ்க்கையில் வரும் புதிய மாற்றங்கள், தொழில்முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. இந்த பதிவுக்கு கீழ், ரசிகர்கள் பலரும் “உங்கள் வளர்ச்சி எங்களை பெருமைப்படுத்துகிறது”, “மீனா கதாபாத்திரம் போலவே வாழ்க்கையிலும் நீங்கள் உயர பறக்க வேண்டும்”, “தமிழ், தெலுங்கு, மலையாளம் – மூன்றிலும் நீங்கள் ஜொலிக்க வேண்டும்” போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு தொலைக்காட்சி நடிகையாக தொடங்கி, இன்று பல மொழிகளில் வாய்ப்புகளைப் பெற்று தொடர்ந்து முன்னேறி வரும் கோமதி ப்ரியாவின் பயணம், பல இளம் நடிகைகளுக்கு ஒரு ஊக்கமாகவே பார்க்கப்படுகிறது. திறமை, உழைப்பு மற்றும் பொறுமை இருந்தால், மொழி எல்லைகளைத் தாண்டி உயர முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார். வரும் காலங்களில் அவர் மேலும் பெரிய கதாபாத்திரங்களில், வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்வார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே வலுவாக உள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு சூழலை குதூகலமாக கொண்டாடி வரும் தொகுப்பாளினி டிடி-யின்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!