மகாநதி சீரியல் முடிந்தாலும் ரசிகர்களை கவரும் காவேரி..!! அழகிய போட்டோஸை வெளியிட்ட லட்சுமி பிரியா..!
சின்னத்திரை சீரியல் நடிகை லட்சுமி பிரியா தனது அழகிய போட்டோஸை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருந்தது ‘மகாநதி’.
வழக்கமான குடும்பக் கதைகளை மட்டும் மையமாக வைத்து நகராமல், உறவுகள், காதல், பாசம், குடும்பப் பிரச்சனைகள் என பல்வேறு உணர்வுகளை கலந்து கொடுத்த இந்தத் தொடர், ஒளிபரப்பான காலகட்டத்தில் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தது.
குறிப்பாக தொடரின் கதாபாத்திரங்களுக்கும், அதில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் சமூக வலைதளங்களில் தனி ரசிகர்கள் உருவாகினர்.
‘மகாநதி’ தொடரில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருந்தது காவேரி. இந்த கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி பிரியா நடித்து வந்தார். காவேரியாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அவர் கையாண்ட விதம் என பல விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் லட்சுமி பிரியாவுக்கும் தொடரின் மூலம் தனி அடையாளம் கிடைத்தது.
இதையும் படிங்க: சுயமரியாதைதான் முக்கியம்.. காமன் மேன் நிகழ்ச்சியை விளாசிய பாலாஜி முருகதாஸ்..!! ஓவியா, ஆரி, ராஜு, மாயாவையும் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை..!
சீரியல் என்றாலே பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதிலும் ஒரு தொடர் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டால், அந்த தொடர் முடியப்போகிறது என்ற செய்தியே அவர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துவிடும். அந்த வகையில் ‘மகாநதி’ தொடரின் முடிவும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தொடர் திடீரென முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் வெளியானபோது, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: செருப்பை துடைங்க.. பிக் பாஸ் தேர்வில் கொடுக்கப்பட்ட சர்ச்சை டாஸ்க்..! என்னை அவமானப்படுத்துறிங்களா.. விளாசிய பெண்..!