சிவப்பு புடவையில் தேவதை போல ஜொலித்த ரேஷ்மா முரளிதரன்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!
நடிகை ரேஷ்மா முரளிதரன் சிவப்பு புடவையில் தேவதை போல ஜொலித்த போட்டோஸ் வைரல் ஆகி வருகிறது.
சின்னத்திரை நடிகைகளில் தனது இயல்பான நடிப்பு, எளிமையான தோற்றம் மற்றும் குடும்பக் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.
தமிழ் தொலைக்காட்சி உலகில் பல்வேறு முன்னணி சேனல்களில் ஒளிபரப்பான தொடர்களில் தொடர்ந்து நடித்து, தனது திறமையை நிரூபித்துள்ள அவர், சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது தனது புதிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ரேஷ்மா, தற்போது வெளியிட்டுள்ள சிவப்பு நிற புடவையிலான போட்டோஷூட் புகைப்படங்களால் மீண்டும் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஹார்ட் பீட் 3'க்கு பிறகு புதிய பயணம்..!! வெப் தொடரில் நாயகியாக களமிறங்கும் யோகலட்சுமி.. ரசிகர்களிடையே அதிகரித்த எதிர்பார்ப்பு..!
தமிழ் சின்னத்திரையில் பல நடிகைகள் அறிமுகமாகி வந்தாலும், ஒரு சிலரே தொடர்ந்து பல சேனல்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
அந்தப் பட்டியலில் இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர்தான் ரேஷ்மா முரளிதரன். ஆரம்ப காலத்திலிருந்தே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், ஒவ்வொரு தொடரிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த தொடர் என்றால் அது "பூவே பூச்சூடவா" என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜீ தமிழில் ஒளிபரப்பான அந்த தொடர் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ரேஷ்மாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.
குறிப்பாக, அவரது இயல்பான நடிப்பு, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் வெளிப்படுத்திய திறமை மற்றும் எளிமையான திரைத் தோற்றம் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
அந்த தொடரின் வெற்றிக்குப் பிறகு, ரேஷ்மாவுக்கு பல்வேறு சேனல்களிலிருந்து வாய்ப்புகள் வரத் தொடங்கின. பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான "அபி டெய்லர்" தொடரில் கதாநாயகியாக நடித்தார். இந்தத் தொடரிலும் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க: ரியலான "A" படம் தியேட்டருக்கு வருது..!! யஷ் நடிப்பில் உருவான பிரம்மாண்ட 'டாக்ஸிக்'.. ரிலீஸ் தேதி அப்டேட் வந்தாச்சு..!