×
 

‘புஷ்பா’ கதாபாத்திரத்தால் மாறிய வாழ்க்கை..!! சினிமாவில் இருந்து சின்னத்திரை வரை கலக்கும் ரேஷ்மா..!

சினிமாவில் இருந்து சின்னத்திரை வரை கலக்கும் நடிகை ரேஷ்மாவின் போட்டோஸ் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத சில கதாபாத்திரங்கள் இருக்கின்றன.


அந்த வகையில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்த ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஒரு கதாபாத்திரம் நடிகரின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதற்கு ரேஷ்மாவின் பயணம் ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.


சினிமாவில் ஏற்கனவே சில படங்களில் நடித்து வந்த ரேஷ்மாவுக்கு, ‘புஷ்பா’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதையும் படிங்க: என் அம்மாதான் என் சாமி.. மேடையில் கண்கலங்கிய சூரி..!! பெண்கள் மனசு வச்சா தான் குடும்பமே.. மகன் பேசப்பேச கண்ணீர் விட்ட தாய்..!

அதன்பிறகு அவரது பயணம் சினிமாவை மட்டும் சார்ந்ததாக இல்லாமல், சின்னத்திரை, சமூக வலைதளங்கள் மற்றும் தனிப்பட்ட தொழில் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.


குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாக்கியலட்சுமி’ தொடரில் அவர் நடித்த ராதிகா கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது.

அதன்பிறகு ‘கார்த்திகை தீபம்’ உள்ளிட்ட தொடர்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனால் சினிமா ரசிகர்களைத் தாண்டி சின்னத்திரை ரசிகர்களிடமும் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

 

இதையும் படிங்க: நான் சபித்தது உண்மைதான்.. ஆனா பிரிய வேண்டும் என நினைக்கவில்லை..!! நாஞ்சில் விஜயன் பதிவுக்கு திருநங்கை வைஷ்ணவி பதில்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share